|
கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தொழில்வாய்ப்பு மற்றும் வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் கொரோனா தடுப்புச் செயலணியின் வழிகாட்டலின் கீழ் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடக நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிவாரண உதவிகள் வழங்க விரும்புகிறவர்கள் மாவட்டச் செயலகம் அல்லது பிரதேச செயலகங்களினுடாக வழங்குவதன் மூலம் நிவாரணம் தேவைப்படுவோர் தவறவிடப்படல் அல்லது மேலதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஒருவருக்கு வழங்கப்படல் போன்றவை தவிர்க்கப்பட்டு சீரான முறையில் நிவாரண வழங்களினை மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என யாழ் மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் நிவாரணங்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் பயனாளிகளை தெரிவுசெய்வதற்கு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்படுகின்ற பட்டியலை மட்டுமே பயன்படுத்துமாறு மாவட்ட செயலகம் அறிவுறுத்துகின்றது. இவ் நிவாரண உதவிகள் தொடர்பான மேலதிக விபரங்களை மாவட்டச் செயலக உத்தியோகபூர்வ இணையதளத்தில் (Relief Assistance) பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 021 222 5000 மற்றும் 021 2 117 117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மாத்திரம் தொடர்புகொள்ளும் படி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
දිසාපති / දිස්ත්රික් ලේකම්

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....
















