10-12-2018திகதிபத்திரிகையொன்றுவீடமைப்பு திட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி எனக்கும் மாவட்டச்செயலகஉத்தியோகத்தர்களும் பெரும் மனவுளைச்சலையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வீடமைப்புதிட்டத்திற்கானபயனாளிகள்தெரிவுசெய்யும் பொழுது "எதுவிதபாகுபாடுமின்றி நீதி நேர்மையுடன் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அரசியல் ரீதியிலோ,
சமுகரீதியிலோ அல்லது சமய ரீதியிலோ எவ்வித பாகுபாடும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் தெரிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று மாத்திரமே தெரிவித்திருந்தேன்.
எனவே குறித்த தினத்தில்வெளியாகியபத்திரிக்கைச் செய்தி திரிபுபடுத்தப்பட்டுவெளியிடப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் வேதனையடைகிறோம்..
மேலும் செய்தியானதுபிரசுரிக்கும் பொழுது தங்களுடைய எண்ணங்களை புகுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளதைஅவதானிக்க முடிகிறது.எனவே அனைத்து ஊடகவியலாளர்களையும் செய்திகளை திரிபுபடுத்தாமல்வெளியிடுமாறும் செய்திகளை பிரசுரிக்கும் முன்எம்முடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் பிரசுரிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.







வடக்




