දිසාපති / දිස්ත්රික් ලේකම්

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....පුවත් සහ සිදුවීම්
News
රාජ්ය සේවා මධ්යස්ථාන
தற்போது உள்ள நிலையில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்தக் கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவதைப் பற்றி அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் அவ் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போதுஎதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரி நிற்கின்றோம் குறிப்பாக வெற்று காணிகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் அந்தக் காணியை முறைப்படி அதாவது குறிப்பாக பற்றைகளை வெட்டி அகற்றி அதற்குமேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள் சிரட்டை பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக காணப்படுகின்றது. அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய கடப்பாடும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கொவிட் 19க்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது. ஆகவே இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு யாழ் மாவட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் யாழ்மாவட்டத்திலுள்ள பத்து முதியோர், சிறுவர் இல்லங்களுக்கு வழங்குவதற்கான தலா ரூபா 100,000/= வீதம் ஒரு மில்லியன் பெறுமதியான சுகாதாரப் பொருட்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் ஊடாக வழங்கி இன்று (12.05.2020) வைக்கப்பட்டது.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டின் பிரகாரம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினரால் யாழ்மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பாவனைக்காக ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் போன்றவை இன்று (10.05.2020 ) யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதேச புள்ளிவிபர கைநூல் 2020 மற்றும் பிரதேச மூலவளத் திரட்டு 2020 ஆகியவற்றைத் தயாரித்ததில் யாழ்ப்பாண பிரதேச செயலகம், பதினைந்து பிரதேச செயலகங்களில் முதல் நிலையில் உள்ளது.
30-04-2020 வியாழக்கிழமை அன்று யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன், உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தத்துடன் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.











