பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.07.2025) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரமாக யூலை 14 தொடக்கம் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மேலும், இவ் தேசிய விழிப்புணர்வு வாரத்தில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார் .
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் திரு. கே. தர்மேந்திரா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ். சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
11 1 2 4 5 6 7 12
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திரு. பாலசுந்தரம் ஜெயகரன் அவர்கள் இன்றைய தினம் (16.07.2025) காலை 08.50 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற திரு பா. ஜெயகரன் அவர்கள் முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6 7 8 9 10 10 12
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.07.2025) காலை 09.00 மணிக்கு கொடிகாமம் கச்சாய் கிராம த்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்றைய தினம் சாவகச்சேரி கச்சாய் கிராமத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 150 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியின் ஏனைய கிராமங்களிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னைப் பயிர்ச் செய்கையின் தலைவரினால் வெள்ள ஈ தாக்கத்தினை கட்டுப்படுத்த மாகாண மட்டத்தில் கெளரவ ஆளுநர் தலைமையிலும் மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையிலும் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் திரு. விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் திரு. ரி.வைகுந்தன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், விவசாய பிரதி மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி பணிப்பாளர், பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திரு. பாலசுந்தரம் ஜெயகரன் அவர்கள் இன்றைய தினம் (16.07.2025) காலை 08.50 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற திரு பா. ஜெயகரன் அவர்கள் முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6 7 8 9 10 10 12
இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தி திட்டங்களை நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என அரசாங்க அதிபர் வலியுறுத்தல்
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீட்டுத் திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 09.07.2025 காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அனுமதிக்கப்பட்ட திட்டங்களை சென்ற ஆண்டு போல் குறிப்பிடப்பட்ட காலத்தில் நிறைவேற்றி முடிக்க அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதுடன், வீதி அபிவிருத்தித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், வீட்டுத் திட்டம், மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை யின் வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களின்முன்னேற்றம் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.