நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்றைய தினம் ( 01.08.2025)
காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான இவ் விழிப்புணர்வு செயலமர்விற்காக கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு.சமன் சிறிலால் மற்றும் அவரது குழுவினருக்கு தமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்தார். மேலும் இவ் கைத்தொழில்சார் நடவடிக்கைகளில் ஏறத்தாழ 6000 தொழில் முயற்சியாளர்கள்
வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 600 தொழில் முயற்சியாளர்களே வினைத்திறனாக செயற்பட்டு வருவதாகவும் இவர்களில் பலர் நுண் மற்றும் சிறிய தொழில் முயற்சிகளிலிருந்து நடுத்தர
தொழில் முயற்சிக்கு நோக்கி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.மேலும், இத்தகைய செயலமர்வுகள் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி என்பது பாரிய பிரச்சினையாக உள்ள இக் காலகட்டத்தில் அரச நிர்வாக கட்டமைப்பால் பல வழிகளில் உதவிகள் வழங்கப்படுகின்ற போதிலும் சில முயற்சியாளர்கள் அரசினால் இலவசமாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதனால் அந்த உதவிகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறைவாக காணப்படுவதாவும் தெரிவித்ததுடன், இதே சொந்த முதலீட்டில் ஒரு வியாபாரத்தை மேற்கொள்ளும் போது முனைப்புடன் முயற்சியுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் எமது பல்வேறு முயற்சியாளர்களை நோக்கி ஏற்றுமதியாளர்கள் யாழ் நோக்கி வருவதாகவும் அதற்கு அவர்களின் தரமான பொருள் காரணம் எனவும் குறிப்பிட்டதுடன், இருப்பினும் முயற்சியாளர்களுக்கு அதன் அளவு, இலாபம் மற்றும் சந்தைப் பெறுமதி என்பவற்றில் இலாபம் குறைவாக காணப்படுவதாகவும் அதற்கு அரச நிர்வாக கட்டமைப்பின் இவ்வாறான விழிப்புணர்வு பயிற்சிகள் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்த துணை புரியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் விருத்தி விழிப்புணர்வு செயலமர்வானது 50 தொழில் முயற்சியாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு.சமன் சிறிலால், பிரதம நிர்வாக அதிகாாி திரு.யூட் பெர்னான்டோ மற்றும் உதவிப்பணிப்பாளர் திரு.சசிகதிமெல், மாவட்ட உதவி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், துறைசாார் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்தும் இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (14.08.2025) யா/பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக சனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் திரு. ந. சஞ்சீவன், கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார, திரு. துலீப் சேமரத்தன ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர்அவர்கள் தமதுரையில், அரச கொள்கை பிரகடனத்தில் கிறீன் ஸ்ரீலங்கா, வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்கள் முக்கியமாக காணப்படுவதாகவும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சமூக ரீதியான பிரச்சினைகள் கலாசார ரீதியான பிரச்சினைகள் உள்ளதாகவும், அவ்வாறான பிரச்சனை கிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்ததுடன், போதைப் பொருள் பாவனையும் அதிகமாக காணப்படுவதாகவும், இவ்வாறான மனநிலையில் இருப்பவர்களை அவர்களின் மனங்களை மாற்றி நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டே கிளீன் சிறிலங்கா திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு முன்னராக தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்த கெளரவ அமைச்சர், கெளரவ ஆளுனர் சனாதிபதி செயலக அதிகாரிகள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், இன்று முதல் ஒரு வாரம் வரை இந் நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் இன்றைய தினம் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு
பருத்தித்துறை மருதங்கேனி கரவெட்டி ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியதாக நடமாடும் சேவை நடைபெறுவதாகவும், இதன் சேவைகள் குறித்து ஏற்கனவே மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இச் சேவையில் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அவ் அறிவுறுத்தவல்களை பின்பற்றி சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்ததுடன் மேலும், சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு இலவசமாக தென்னம்பிள்ளை வழங்கப்படவுள்ளதாகவும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்திற்கு உதவி புரிந்த சனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் மாகாண சபை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து சேவை சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்புகக்ளையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகண சபை செயலாளர்கள், அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூா் பிரதேச செயலகம் கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (25.07.2025) வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கொக்குவில் செல்வமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நல்லூா் பிரதேச செயலாளர் திருமதி.உதயகுமாா் யசோதா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் உயர்திரு. கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், இராஜேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் உயர்திரு.செல்லத்துரை திருமாறன் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அமரர் குழந்தை சண்முகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாச்சிமாா் கோயிலிருந்து பண்பாட்டுப் பேரணியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம்,மங்கல இசை, இசைச்சங்கமம், நாடகம் (மாருதப்புரவீகவல்லி) நடனம் (தமிழ் வணக்கம் - நல்லைக் கலாமந்தீர் நடனாலயம் ) இசை நாடகம் (சத்தியவான் சாவித்திரி) என்பன சிறப்பாக நடைபெற்றது.
மூத்த கலைஞர்களுக்கான "கலை ஞானச்சுடர் விருது" மற்றும் இளங்கலைஞர்களுக்கான இளங்கலைஞர் விருதுகள் என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.

அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவான கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக "இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான பயணம்" எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் - பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும், 15 ஆம் திகதி உடுவில், தெல்லிப்பளை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.
இவ் நடமாடும் சேவையில் ஆட்பதிவுச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவைகள், ஓய்வூதியச் சேவைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சேவைகள், மோட்டார் வாகனப் பதிவுகள், கம்பனிப் பதிவுகள், சுகாதார சேவைகள் - கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சேவைகள், ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள், வடக்கு மாகாணத்தின் சகல அமைச்சிற்குரிய சேவைகள், பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய சேவைகள் உள்ளிட்ட சேவைகள் நடைபெறவுள்ளது.
மேற்படி நடமாடும் சேவைக்கான முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இன்றைய தினம் (02.08.2025) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திற்கும், உடுவில் பிரதேச செயலகத்திற்கும் - மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி ஆகியோர் சகிதம் சென்று உரிய முன்னாயத்த அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இவ் முன்னாயத்த ஏற்பாடுகளில் பருத்தித்துறையில் பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரும், உடுவிலில் உதவிப் பிரதேச செயலாளரும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் ஆராய்ந்தார்.
மேலும், சமுர்த்தி முகாமையாளர்களால் நிர்வாக ரீதியான செயற்பாட்டிற்கான கணினி மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்க அதிபர் அவர்கள் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முகாமையாளர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறி கலந்துரையாடினார். மேற்படி கோரிக்கைகளை இவ்வாண்டுக்குள் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக அரசாங்க அதிபரால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்டச் செயலக விடய சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு சமுர்த்தி முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





