றேக் ஓட்டோ கண்காட்சி (RAKS AUTO SHOW ) - 2025
இக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினமன் குளோபல் பி.வி.ரி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. சோனல் வீரக்கொடி, டிமோ லங்கா சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் திரு.சாலக்கா போகோடா அவர்களும் கலந்து கொண்டனர்.


இரசாயனம், உயிரியல், கதிர்வீச்சுஅழ மற்றும் அணுக்கசிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கையாள்வது மாவட்ட மட்ட கட்டமைப்பை உருவாக்கல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.07.2025) காலை 08. 45 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தத்தின் போது ஒத்துழைப்பு நல்கிய முப்படையினருக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ள அனர்த்தத்துடன் ஒப்பீடு செய்யும் போது, இரசாயனம் மற்றும் கதிர்வீச்சு, அணுகசிவு போன்ற இடர்களுக்கு எதிர்காலத்தில் பதிலிறுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கபடவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் தீவுப்பகுதியில் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயன பாதிப்பு தொடர்பான விழிப்பணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை எனவும் அதேபோல் அணுக்கசிவு மற்றும் கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வும் பெரும்பாலான மக்களுக்கு இல்லாத காரணத்தினால், முதற்கட்டமாக குறிப்பிடப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இச் செயலமர்வு மிக முக்கியம் எனவும் தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வுச் செயலமர்வின் வளவாளர்களாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு. சான் பத்திரன மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என் சூரியராஜா அவர்களும் பங்குபற்றினர். மேலும் இரசாயன, உயிரியல், அணுக்கசிவு, மற்றும் கதிர் வீச்சு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட மட்ட எதிர்கால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை தொடர்பாக பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என் சூரியராஜாவால் விபரிக்கபட்டது.
இச் செயலமர்வில் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், வைத்தியர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்றாம்நிலை கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பற்றி கலந்துரையாடியதுடன், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யவும் அது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடாத்தவும் அரசாங்க அதிபர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்படாது தொழிற்கல்வியை நடத்திவரும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலுடன் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பணிப்பாளுடன், உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். கல்பேச், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் திரு. கே. நிரஞ்சன் மற்றும் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர்
திரு. த.நீலாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், எமது வரலாற்று
தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும், தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையுமென்றும் குறிப்பிட்டார்.
யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள் எனவும், பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை எனவும், மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது எனவும், ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளதாகவும், காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும் எனவும் அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருவதாகவும், ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது எனவும், தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டதுடன், பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் எமக்கு கிடைப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டு எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் "வேரும் விழுதுகளும்" விருதினை மூவருக்கு வருடாந்தம் வழங்கும் திட்டத்தினை யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்களம் அறிமுகப்படுத்தி இருந்தது.
இதன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகளை யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான திரு. மார்க்கண்டு
அருட்சந்திரன், விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளருமான திருமதி
அஜந்தா சுப்பிரமணியம், மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான சிவயோகநாதன் பாலயோகஸ்தினி ஆகியோர் தொல்லியல் மரபுரிமைகளை பேணி பாதுகாத்தமைக்காக அரசாங்க அதிபரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபை உதவிப் பணிப்பாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை பீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர், தொல்லியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் ஆகியோரும் யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.







