யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடங்களான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.08.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்த பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் கெளரவ பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண அவர்கள் அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்துவதனை சவாலாக ஏற்றுச் செயற்படுத்துமாறு கூறியதை குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், திட்டங்களை முழுமையாக இவ்வாண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க வினைத்திறனாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், இலங்கை நிர்வாக மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டம் அதிக கவனம் ஈர்க்கப்படுவதாக கெளரவ அமைச்சர் தெரிவித்துள்ளதால் அனைவரும் ஒன்றிணைந்து குழுவாகச் செயற்பட அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதுடன், இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டு, உரிய காலத்தில் வினைத்திறனாக நிறைவேற்றி முடிக்க அரசாங்க அதிபரால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட , பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அதுவும் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு மெருகூட்டுவதாக இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும், இலங்கை துடுப்பாட்டச் சங்கம் துடுப்பாட்ட வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும், சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருவதாகவும், கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு தடவைகள் மண்டைதீவிற்கு விஜயம் செய்து ஆராய்ந்ததாகவும், மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய வசதிகளுக்கான மேலதிக காணிகள் தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார். மேலும், இவ் சர்வதேச மைதானம் வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் குறிப்பிட்டதுடன், எமது மாணவர்கள் சர்வதேசம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்குபற்றிவருவதாகவும், அந்த வகையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், இலங்கை 19 வயது அணியில் பரியோவான் கல்லூரி மாணவன் மாதுளன் மற்றும் ஹாட்லி கல்லூரி மாணவன் ஆகாஷ் இடம் பெற்றுவருவதும் பாராட்டத்தக்க விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எமது மாணவர்கள் அதன் மூலமும் தமது திறமைகளை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும் எனவும், மாவட்டச் செயலகத்தினால் விளையாட்டு மற்றும் கல்விக்கான நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நிதியீட்டம் மேற்கொள்ளப்படும் எனவும், அதன் மூலம் எமது மாணவர்களுக்கான தேவைப்பாடுகளை நிதியத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் சிபார்சின் அடிப்படையில் அரசாங்க அதிபரால் தேவைக்கேற்ற நிதி அனுமதிக்கப்படும் எனவும், இதன் மூலம் உடனடித் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்ய வழி ஏற்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் எமது மாணவர்கள் முன்னேற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை துடுப்பாட்டச் சங்கம் மற்றும் விளையாட்டு த்துறை அமைச்சின் அனுசரணையுடன் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தேசிய ரீதியான துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றமையுடன், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ சுனில் குமார கமகே அவர்கள் கலந்து சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 17 பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணிகளும் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலைகளுக்கான பொறுப்பாளர், பாடசாலை அதிபர்கள், துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பல பேர் கலந்து கொண்டார்கள்.
இதன் போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவிக்கையில், கடல்பிரயாணம் மூலம் நெடுந்தீவு சென்று கடமையாற்றும் அனைத்துத் தர உத்தியோகத்தர்களையும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடமையாற்றுவதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது மிகுந்த மன வேதனைக்குரிய வியடமாகும் எனவும், தாம் விரக்தி நிலையில் இருப்பதாகவும், அச்செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தார்கள்.
மேலும், பிரதேச செயலாளர் ஒரு பெண்ணாக இருக்கின்ற பொழுதிலும் கடமைக்கு ஒழுங்காக சமூகமளிப்பதுடன் அவசர நிலமைகளின் போது நெடுந்தீவிலேயே தங்கி நின்று பணியாற்றுபவர் எனவும்
மேலும், பொதுவாக தண்டனையின் பேரிலேயே நெடுந்தீவிற்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பரவலான கருத்து உள்ளமையும் மிகவும் வேதனைக்குரிய விடயம் எனவும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரை நேரடியாக கோரியதுடன், கோரிக்கை மனுவினையும் கையளித்தார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சமூக வலைத்தளங்களில் வரும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை பெரிது படுத்ததேவையில்லை எனவும், குறித்த பதிவு தொடர்பில் உத்தியோகத்தர்கள் மன உளைச்சலடைய வேண்டிய அவசியமில்லை என்றும் உத்தியோகத்தர்கள் எவ்வளவு சிரமப்பட்டு நெடுந்தீவிற்கு சென்று கடமையாற்றுகின்றாா்கள் என்பது எமக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயம் என தெரிவித்தாா்.
மேலும், தற்போது கடமையாற்றும் பிரதேச செயலாளர் பதவியுயர்வு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் எனது கோரிக்கையின் அடிப்படையிலேயே புதிய பிரதேச செயலாளர் கடமையை பொறுப்பேற்கும் வரையில் தொடர்ந்து கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அற்ற நிலையில்அனைத்து கடமைகளையும் பிரதேச செயலாளரும் ஏனைய உத்தியோகத்தர்களும் இணைந்து எவ்வித முறைப்பாடுகளும் அற்ற நிலையில் கடமையாற்றுவதற்கு தனது பாராட்டுக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தாா்.
மேலும், நெடுந்தீவு வாழ் மக்களின் நிலைமையினை கருத்திற்கொண்டு உத்தியோகத்தர்களை அங்கு நியமிக்கும் போது வேறு பிரதேச செயலகங்களிலிருந்து கடமைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களிற்கு உள்ளாவது அனைவரும் அறிந்த விடயம் என்றும், வழமையாக காலை 8.00 மணிக்குப் புறப்பட்ட படகு சேவை அவ் உத்தயோகத்தர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதற்கு ஏதுவாக கடந்த 2025.08.11ம் திகதி முதல் காலை 7:30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படுவதாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஏனைய சிரேஷ்ட தர உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாத சந்தர்ப்பத்திலும் பிரதேச செயலாளருடன் இணைந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களது சேவை அளப்பரியது எனவும் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதனை விடுத்து ஆக்கபூர்வமான ஆரோக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும் வெளியிடுவதே ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையே கடந்த 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதி நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுடன் இன்றைய தினம் (19.08.2025) பி. ப 4.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர் எனவும், அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள் எனவும், பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளதாகவும், அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலக த்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மொது மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.