யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், கெளரவ விருந்தினராக திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோசெப் யோன்சன் ராஜ்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் (திருமறை கலாமன்றம்), மங்கல இசை, கிராமியப் பாடல், இஸ்லாமிய நடனம், இசைச்சங்கமம், நாட்டிய அர்ப்பணம் நடனம் (கிழவன்காடு கலாமன்றம், யாழ்ப்பாணம்), வாத்திய பிருந்தா (கீதவாகினி இசைக் கல்லூரி, கொழும்புத்துறை), வட மோடி நாட்டுக்கூத்து (யாழ்ப்பாண பிரதேச மழலைக் கலைஞர்கள்) என்பன சிறப்பாக நடைபெற்றது.
மூத்த கலைஞர்களுக்கான " யாழ் ரத்தினா விருது" மற்றும் இளங்கலைஞர்களுக்கான "கலைத்திறன் விருது" என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், "யாழ் பாடி" கலாசார மலர் வெளியீடும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
அரசாங்க அதிபருடன் கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் இன்றைய தினம் (12.08.2025) ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் சனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா அஞ்சலி கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார, திரு. துலீப் சேமரத்தன, ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. தெ. கபிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விசேட நாடும் சேவைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் கெளரவ ஆர்.எச் .உபாலி சமரசிங்க அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் திரு சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இக்கலந்தரையாடலில் வரவேற்பு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கலந்துரையாடலுக்கு வருகைதந்த கெளரவ அமைச்சர், வடமாகாண கெளரவ ஆளுநர், கெளரவ பிரதி அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று, மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளதாகவும் அதனை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்து கெளரவ அமைச்சர் தலைமையில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும் எனவும் மீள ஆரம்பிப்பதற்கான விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்கு கௌரவ அமைச்சர் முன்வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது எனவும் தெரிவித்து, கெளரவ அமைச்சர் அவர்களிடன் தேவைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடலாக அமையவுள்ளதாகவும், இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுவதாகவும் 14 இயங்கி வருவதாகவும் வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை எனவும் தெரிவித்தார். இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை எனவும் பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை எனவும் தெரிவித்ததுடன், இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம் பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்து அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலுக்கு முன்னராக கெளரவ அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச செயலாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர்.
இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு எனும் கருப்பொருளிலான செயற்றிட்டம் நாளையிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான ஐனாதிபதி செயலக ஏற்பாட்டுக் குழுவினர் புகையிரதம் மூலம் இன்றைய தினம் (12.08.2025) புதன்கிழமை மதியம் 02.30. மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
புகையிரதம் மூலம் வருகைதந்த சனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ர உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா ஞ்சலி கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார மற்றும் திரு. துலீப் சேமரத்தன உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வில் கடற்தொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகையிரதத்தில் வந்தோரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து புகையிரதத்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கான இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் இன்றைய தினம் (09.08.2025) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களையும் வழங்கினார்.மேலும், கெளரவ அமைச்சர் அவர்களுடன் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்.
மேலும், கெளரவ அமைச்சர் களுடனான விஜயத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்,நெடுந்தீவு பிரதேச செயலாளர், வேலணை உதவிப் பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.





