கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. ஈ. தயாரூபன் அவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு F. C. சத்தியசோதி அவர்களும் இன்றைய தினம் (01.09.2025) காலை 08.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இன்றைய தினமே புதிதாக நியமிக்கப்பட்ட கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள் தமது கடமையினை பொறுப்பேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2
நெவாட் நிர்வாக கட்டடத் திறப்பு விழாவானது கியூடெக் - கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குநர் யாழ்ப்பாணம் அருட்பணி அன்ரோ டெனிசியஸ் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (29.08.2025) வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு கடற்கரை வீதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மீன்பிடியல் துறைத் தலைவர் கலாநிதி திருமதி எஸ். சுதர்சினி அவர்களும், கெளரவ விருந்தினர்களாக அருட்பணி கி . ஜெயக்குமார் அவர்களும் மற்றும் அருட்பணி ச. இயூஜின் பிரான்சிஸ் அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வானது யாழ் மறை மாவட்ட ஆயர் பேர்ருட் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆசியுரை யுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
1 2 3 4 5 5 7 8
 11பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்ளை பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிரவகிப்பதற்கான தேசிய வழிக்காட்டி ஆவணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2025. 08.28 ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சின் வழிக்காட்டுதலின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் ofERR ceylon அனுசரனையுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
பாலியல் அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்ளை வைத்து பராமரிக்கும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்கள் ,
பெண்கள் பாதுகாப்பு இல்லங்களின் அடிப்படை நெறிமுறைகள், பெண்கள் பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான
வழிகாட்டுதல்கள், தங்குமில்ல வழிகாட்டுதல்களை புரிந்து கொள்வது, தங்குமில்ல பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் ,பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட ஆலோசனை ஆகிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டல் இடம்பெற்றது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உளநலவைத்தியர் திருமதி. A.வினோதா , வடமாகாண சிறுவர் நன்னடத்தை சேவைகள் திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீபா சதாசிவம்
யாழ்ப்பாண சட்டத்தரணி திருமதி யசோதா சுகந்தன் , வலயக்கல்விப் பணிப்பார்கள் தற்காலிக பாதுகாப்பு இல்ல திட்ட இணைப்பாளர், ofERR Ceylon திருமதி இ.கிருஷானந்தி, நிகழ்ச்சித்திட்ட வளவாளர் திருமதி இந்திராணி ராஜேந்திரன், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கி.தயாபரி, JSAC நிறுவனத்தின் உத்தியோகத்தர் ,சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 11 12 13 
 
உணவு பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (29.08.2025) காலை 09.00 மணிக்கு நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், உணவு பாதுகாப்பு வலையமைப்பினை மேம்படுத்தல் மூலம் வறுமை நிலைமையினையும், உணவுப் பாதுகாப்பற்ற விடயங்களையும் அடையாளப்படுத்தி தரவுகளை சேகரிப்பதாகும் எனவும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சரியான தரவுகள் அவசியம் எனவும், தரவுகள் சேகரிப்பு முழுமையடைந்து ஆய்வு செய்யப்பட்டு இவ்வருடத்திற்கான முதலாவது அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் மூலம் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உதவியாகவிருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக உணவுத் திட்டம் பல ஆண்டுகளாக பாரிய பங்களிப்புக்களை வழங்கிவருவதாகவும், அந்த வகையில் வடக்கு கிழக்கில் உலக உணவுத் திட்டத்தினை கையாண்ட அதிகாரி திரு. நியூமத் அவர்களின் பங்களிப்பினையும் பாராட்டியதுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன்,
உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 34 
கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்றைய தினம் (28.08.2025) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் சனாதிபதி அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளதாகவும், வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிச்சயம் நிறைவேறும் என்றும் அதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.மேலும் டொலரின் பெறுமதி ஸ்திரமற்ற நிலையிலிருந்து தற்போது சீராகவுள்ளதாகவும், டொலர் கையிருப்பு படிப்படியாக அதிகரித்து 6.09 பில்லியன் டொலர் உள்ளதாகவும், இவ்வாண்டுஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25 இலட்சத்தினை அடைந்துள்ளதாகவும், நாடு அபிவிருத்திப் பாதையில் செல்வதாகவும், பாரியளவிலான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் எனவும், அந்தவகையில் மேன்மேலும் கூடுதலான நிதி யாழ்ப்பாண அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் வீதி அபிவிருத்திக்கு மேலும் நிதி விடுவிக்கப்படவுள்ளதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்து, நாட்டினை கட்டியெழுப்ப அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தினை கெளரவ அமைச்சர் ஆராய்ந்தார்.
 
 
1 2 3