வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (09.09.2025) செவ்வாய்க்கிழமை மாலை 02.30 மணிக்கு சூரியமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.பிரதேச செயலாளர் திரு. நடராசா திருலிங்கநாதன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபராஷ் அவர்களும் , மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக மூத்த கலைஞர்களான திரு.வெ. முத்துச்சாமி மற்றும் திரு.மு. ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் இளையமுத்து துரைமுத்து அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலக முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் உடுக்கிஇசை (வடமராட்சி வடக்கு வாழ் கஞைர்கள்), வரவேற்பு நடனம் (தொண்டைமானாறு அபிநயசுரபி நடன மன்றம்), கீர்த்தனை (ஞான சம்பந்தர் மன்றம்), காளிங்க நர்த்தனம் (பரத சிவாலய கலைமன்றம்), வில்லிசை (வள்ளி திருமணம்-வேணுகான சபாமன்றம்) நாடகம் (நட்பின் பரிசு வெ. முத்தச்சாமி குழுவினர்), பாரதியின் நடனம் (பரதசுரபி கலாமன்றம) என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைப்பரிதி" "இளங் கலைஞர்" "இளங் கலைப்பரிதி"விருதுகள் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், தேசிய கலை இலக்கியப் போட்டிகளின் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி வீர வீராங்கனைகளுக்கான நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.09.2025) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அலுவலகப் பணிக்கு மேலாக இவ் போட்டிகளில் பங்குபற்றுவது பாராட்டத்தக்க விடயம் எனவும், அதிலும் குடும்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் குறிப்பாக பெண் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், தேசியப் போட்டிகளில் பங்குபற்றுவது சவாலான விடயம் எனவும், அந்தவகையில் எமது மாவட்ட வீரர்கள் வீராங்கனை பங்குபற்றி வெற்றியீட்டி யாழ்ப்பாண மாவட்டத்தினை பெருமைப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இப் போட்டிகளுக்கு முன்னின்று உழைத்த வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்களினையும் அரசாங்க அதிபர் பாராட்டினார். மேலும்,
எமது பலநாள் கனவான சர்வதேச கிரிக்கெட் மைதானம் மண்டைதீவில் அமையவிருப்பதும், உள்ளக விளையாட்டு அரங்கு அமையவிருப்பதும் பாடசாலை களுக்கான விளையாட்டு அபிவிருத்தி க்கும் அரசாங்கமானது முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், இதன் மூலம் எமது மாவட்டம் விளையாட்டு துறை மேன்மேலும் அபிவிருத்தி அடையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்குபற்றியவர்கள் தமது அனுபவப் பகிர்வினையும் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது 27.06.2025 அன்று கொழும்பு எட்வேட் ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் கலப்பு போட்டியில் 1 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான D பிரிவில் விலக்கல் முறையில் 1 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான B பிரிவில் விலக்கல் முறையில் 2 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான D பிரிவில் சுழற்சி முறையில் 3 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான போட்டிச் சான்றிதழ்களும், பதக்கமும் அணிவிக்கப்பட்டதுடன், அணிகளுக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம பொறியிலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், வடக்கு வலய பதிவாளர் நாயகம், உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

இந்தியத் துணைத் தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (09.09.2025) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.இக் கருத்தரங்கில் குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக மாற்றுவதற்கான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,இந்திய துணை தூதரகமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக சமூகத்திற்கு பல ஆரோக்கியமானசெயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு அங்கமாக இந் நிகழ்வு நடைபெறுவதாகவும் அதற்காக தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்கால போக்கு தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்று வைத்திய கலாநிதி சரண்யா ஜெயக்குமார் அவர்கள் எடுத்துக் கூறினார் எனவும் சிறுவர்களோடு தொடர்பு கொள்வதற்கு குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்து, சூழல் போக்கு மாற்றத்திற்கு ஏற்ப அவர்களை ஆற்றுப் படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் பல தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக அரசாங்கம் ஒரு குழந்தை கருவில் உருவாகியது முதல் முதியோர் ஆகும் வரை பல வழிமுறைகளில் உத்தியோகத்ர்களை நியமித்து அவர்களை வழிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதில் ஆசிரியர்களின் பங்கும் காணப்படுவதாகவும் மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா செயற்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.09.2025) மு.ப 10.30. மணிக்கு அரசாங்க அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடல் மாவட்ட பண்பாட்டு் விழா இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்காக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கமைவாக விழாவுக்கான மலர் வெளியீடு, மலருக்கான ஆக்கங்கள் கோரல், விழாவுக்கான குழுக்களை தீர்மானித்தல், அழைப்பிதழ் , நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்பு,மண்டப ஒழுங்கமைப்பு , விருதுகள் வழங்கல் ,வாகன ஒழுங்கமைப்பு , போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட பண்பாட்டு பேரவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.