இச் தொழிற் சந்தையினை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மற்றும் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர் பார்வையிட்டு, தொழிற்சந்தையில் கலந்து கொண்டவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. கே. ஜி. எச். எச். ஆர். கிரியல்ல ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
இக் கலந்துரையாடலில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளை மக்களுக்கு மேன்மேலும் வினைத்திறனாக வழங்குதல் தொடர்பாக கௌரவ பிரதி அமைச்சர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி கலந்துரையாடியதுடன், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டதுடன், உத்தியோகத்தர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் கெளரவ மஹிந்த ஜெயசிங்ஹ அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. கே. ஜி. எச். எச். ஆர். கிரியல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இந் நிகழ்விற்கு வருகைதந்த கெளரவ பிரதி அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், வேலை வாய்ப்பு இன்றியிருக்கும் இளைஞர் யுவதிகளை தொழில் வழங்குனர்களையும் இணைக்கும் சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாகவும், இன்றைய இளைஞர்கள் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது போட்டித் தன்மையுள்ள சமூகம் எனவும், தொழில் வழங்குனர்களின் எதிர்பார்க்கைக்கு அமைய தொழிலிற் திறமையினை வெளிப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் என்றும் துணைநிற்கும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் உரையாற்றுகையில், எமது அரசாங்கம் வடக்கில் தொழிற்சாலைகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், பலாலியில் முதலீட்டு வலயம் உருவாக்கப்படவுள்ளதாகவும், வடக்கின் சுற்றுலாத்துறையிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கெளரவ பிரதி அமைச்சர் தமதுரையில், அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியினைத் தொடர்ந்து தமது அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட முதலாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி யானது எனவும், அதிகளவானோர் வருகைதந்துள்ளதாகவும் அதில் குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருகைதந்தமை வரவேற்க்கத்தக்கவிடயம் எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்வின் நோக்கம் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சி வழங்குதலேயாகும் எனவும், இன்றைய நிகழ்வினை சந்தர்ப்பமாக எடுத்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும், பொருத்தமான தொழில் கிடைக்க பயிற்சி அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், மேன்மேலும் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சமுதாயம் முன்னேற்றகரமாக பயணித்து அனைவரதும் வாழ்க்கை அழகாக மாற்றமடைய தமது அரசாங்கம் துணைநிற்கும் எனவும், இன, மத, மொழி மற்றும் ஜாதி கடந்த நிலையில் எதுவித பாகுபாடு இன்றி அனைவரினதும் வளமான எதிர்காலத்தினை வழங்க தமது அரசாங்கம் பாடுபடும் எனவும் கெளரவ பிரதி அமைச்சர் தெரிவித்து, இன்றைய இந் நிகழ்வானது தாம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக நடைபெற ஒழுங்கமைத்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை மிகவும் பாராட்டி தமது நன்றியினையும் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்கள பணிப்பாளர் திருமதி சானிகா மயாதுன்னே, மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு கே. கருணாகரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.
இன்றைய தொழிற்சந்தை நிகழ்வில் 1500 இற்கு மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டதுடன், தொழில் வழங்கும் 40 நிறுவனங்களும்,15 பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் நிகழ்வு
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களும், யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்ஷினி அவர்களும், இரண்டாம் மொழி சிங்கள வளவாளரான திரு. சச்சிதானந்தம் நந்தன் அவர்களும், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இரண்டாம் மொழி கற்பதற்கான 150 மணித்தியாள பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களை வாழ்த்துவதுடன், உத்தியோகத்தர்களின் வினைத்திறனாக சேவைக்கு இப்பயிற்சி நெறி உதவும் எனவும், மேலும் டிப்ளோமா கற்கைகளைக் கற்று மேன்மேலும் இரண்டாம் மொழிகளில் பாண்டித்துவம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்வில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளில் தாம் அவதானித்த வகையில் உத்தியோகத்தர்களின் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஆரம்ப கட்டமாக அலுவலக நடைமுறைகளை சமாளிக்க கூடியவகையில் இப் பயிற்சி நெறி அமைந்துள்ளதாகவும், அந்த வகையில் வளவாளர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் வளவாளர்களும் கெளரவிக்கப்பட்டதுடன், 100 உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.







