யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் கிராமிய அபிவிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், பனை விதை நடுகைக்கான நிதி ஒதுக்கீடு, அஸ்வெசும திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுறுத்தியவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துடன், முடிவுறுத்தாத வேலைத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு திட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் , உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்திற்கு வருகை தந்த நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்களை வரவேற்றதுடன், பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் உள்ளூராட்சி சபைகள் ஒருங்கிணைந்து கடமையாற்றும் போது அது மக்களுக்கு வெற்றியளிக்கும் எனவும், அந்தவகையில் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இணைந்து செயற்படுவதே மக்களுக்கு நன்மையாகும் எனவும் தெரிவித்தார். மேலும், பருவமழை காலங்களில் உள்ளூராட்சி அமைப்புக்களுடன் பிரதேச சபைகள் இணைந்த வகையில் ஆற்ற வேண்டிய முன்னாயத்த வேலைகளை ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், கடந்த ஆண்டு வெள்ள அனர்த்த நெருக்கடி ஏற்பட்டமைக்கு அத்துமீறிய - சட்டவிரோத கட்டடங்களும் காரணமாக அமைந்துள்ளதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபரால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.தீவகப் பகுதிகளில் அனர்த்தம் தொடர்பாக கள விஜயத்துடன், முன்னாயத்த கூட்டங்களை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்டது.அந்தவகையில் நெந்தீவில் எதிர்வரும் 30 ஆம் திகதியும், வேலணையில் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி காலையும், மாலை ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திலும், காரைநகர் பிரதேச செயலகத்தில் 02 ஆம் திகதியும் கூட்டங்களை நடாத்துவது எனவும் இக் கூட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்டவர்களையும் தொடர்புடைய திணைக்களங்களையும் அழைத்து ஆராயுமாறு அரசாங்க அதிபர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
2.யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோர கழிவுவாய்கால் துப்புரவு செய்யப்பட வேண்டுமென ஆராயப்பட்டதுடன், ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
3.நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தர்மடம் பகுதியில் கால்வாய்கள் சீரமைகப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டதுடன், ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி பிரதேச மட்ட பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
4.சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் வெளிப்பகுதியில் காணப்படும் திண்மக்கழிவு பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பாக அனைவரும் பொறுப்புணர்வுடன் இணைந்து செயல்பட அறுவுறுத்தப்பட்டது.
5 சங்கானை பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் உவர்நீர்த்தடுப்பு செயற்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,
ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி பிரதேச மட்ட பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
6.கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கரவெட்டி புறா பொறுக்கி எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக உள்ள வடிகால் வாய்க்கால் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அனர்த்த நிலைமையினை கருத்தில் கொண்டு தீர்ப்பை பெற்றுக்கொள்ள பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன், ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி களவிஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாலடி கால்வாய் புனரமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி பிற்பகல் இது தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
7.பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனர்த்த நிலைமையினைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக கால்வாய் புனரமைப்பு மேற்கொள்ளவும் தொடர்ந்து அதனை சீர்திருத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
8.மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகர மரங்களை அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளவும், தீர்வு காணப்படாத சந்தர்ப்பத்தில் அப்பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கவுக்கவும் ஏற்கனவே சுற்றுநிருபம் உள்ளதால் தேவையற்ற ஆபத்துக்களை தவிர்க்க கூடிய வழிவகைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நெடுந்தீவு, காரைநகர் மற்றும் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீதிப் புனரமைப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலின் ஒரு அங்கமாக சுற்றாடல் குழுக்கூட்ட விடயங்களும் ஆராயப்பட்டன. இவ் விடயங்களான ஒலி பெருக்கிகளின் அதிக இரைச்சல் காரணமாக பொதுமககளின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அசௌகரிக விளைவிக்கப்பட்டால் குறித்த பிரிவு கிராம உத்தியோகத்தர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட முடியுமென அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து திண்மக்கழிவு அகற்றல், டெங்கு கட்டுப்பாடு மற்றும் வளிமாசடைதல் உள்ளிட்ட தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மாதத்திலும் குறித்த ஒரு தினத்தில் பிரதேச செயலாளர்கள், உள்ளூர் அதிகாரசபை உறுப்பினர்கள் ,பொலிசார் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் இணைந்து கிராம மட்ட பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந் அனர்த்த நிலைமைகளில் கடந்த காலங்களை போன்று பொலிஸ் மற்றும் முப்படைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், முப்படைகளின் அதிகாரிகள், துறைசாா் திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு வளமான நாடு - செழிப்பான பிரதேசத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிளீன் ஸ்ரீலங்கா தேசியத் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக முதற்கட்டமாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராமத்தை தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான மூன்றாண்டு செயற்பாட்டுத் திட்டத்தினை தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும் சமூக நல்வாழ்வு, கலாசார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக அக் கிராமங்களை உற்பத்தித் திறன் ஊடக அபிவிருத்தி செய்வதே நோக்கமானது எனத் தெரிவித்துடன், வறுமை ஒழிப்பு மற்றும் டியிற்றல் மயமாக்கலையும் உள்ளடக்கியவகையில் உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றி ஒத்துழைப்பு நல்குமாறும் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இத் திட்டத்தின் நோக்கத்தினை உற்பத்தித் திறன் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் தர்ஷினி ரணசிங்க அவர்களால் விபரிக்கப்பட்டது.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, யாழ்ப்பாண மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திரு. எஸ். பிரசாத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திரு. ஆர். புவனேந்திரன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.
இச் செயலமர்வில் வடமாகாணத்தினைச் சேர்ந்த உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

இந் நிலையத்தின் செயற்பாடுகளை இந்த மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்து பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்தும் அதன் இட அமைவு தொடர்பாகவும் அமைச்சின் உயர் அதிகாாிகளுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டதுடன், பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தொடர்ந்து இயக்குவதற்கான தேவைபாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்,
மேலும், இந் நிலையத்தின் செயற்பாடுகளை இந்த மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமூகத்துக்கு பயனுள்ள வகையில் இந்நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர் , சாவகச்சேரி பிரதேச செயலாளர், கணக்காளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர்.

யாழ் மாவட்ட மகளிர் விவகாரக்குழுக்களின் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், சமூக சேவையாக கடமையாற்றும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலமே பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை செயற்படுத்த முடியும் எனவும், இதற்காக பிரதேச மட்ட குழுக்களுக் ஊடாக இந்த மாவட்ட மட்ட சம்மேளனம் அமைக்கப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும்,
மகளிர் விவாகார சம்மேளனம் புதிய செயற்றிட்டங்களை அனைவரும் இணைந்து சேவையாற்ற வேண்டும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் செயலாளரினால் சென்ற கூட்டறிக்கை மற்றும் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்படதுடன், பொருளாரினால் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாக சபைத் தெரிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாக சபையின் தலைவராக திருமதி மதனரூபி நிரோஷானந் அவர்களும், செயலாளராக திருமதி விசாலினி செல்வகுமார், பொருளாளராக திருமதி சர்மிளா அருண்பாபு அவர்களையும் உள்ளடக்கியவகையிலும்,15 பிரதேச செயலகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய நிர்வாக சபை அங்கத்தவர்களளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ. தர்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி. தயாபரி, மாவட்ட உளவளத்துணை அபிவிருத்தி இணைப்பாளர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட மகளிர் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.






