இச் சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக பிரதேச செயலகங்களில் வேல்ட் விசன் ( World vision ) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதேவேளை யாழ் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்போகும் சில திட்டங்களுக்கான நிதியானது வேல்ட் விசன் ( World vision ) நிறுவனத்தின் ஊடாக வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
வேல்ட் விசன்( World vision )பிரதிநிதிகளான தேசிய வள மேம்பாட்டுத் திணைக்களத்தின் பங்குதாரர் ஷாலோமி செல்வராஜ் மற்றும் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.ஜீட் நிஷாந்தன் ஆகியோா் பங்குபற்றினர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையில்1130 பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
இன்றைய நடமாடும் சேவையில் கண் பரிசோதனையினை 523 பேரும், ஆட்பதிவுச் சேவையினை 441 பேரும், மருத்துவ பரிசோதனைச் சேவையினை 442 பேரும், பிறப்பு இறப்பு பதிவுச் சேவையினை 103 பேரும், மத்திய மோட்டார் வாகன போக்குவரத்து சேவையினை 26 பேரும், மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையினை 101 பேரும், ஓய்வூதிய சேவையினை 26 பேரும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகளினை 2 பேரும் காணி தொடர்பான சேவைகளினை 19 பேரும் பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகளினை 10 பேரும் பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 7 பேரும் முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 3 பேரும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளினை 9 பேரும் கிராம சேவையாளர்களால் வழங்கப்படும் சேவைகளினை 2 பேரும் உள்ளடங்களாக1130 பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசாங்க அதிபர் அவர்கள் கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் அவர்களோடு தொடர்பு கொண்ட போது இவ் நடமாடும் சேவையின் மூலமாக 107 பேர் கண்புரை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் இவர்களுக்கான சத்திர சிகிச்சையினை மூன்று வார காலத்துக்குள் இலவசமாக மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சு - வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கீழ் வடமாகாணத்தின் மாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.09.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் குடும்பங்களையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களின் குடும்பங்களையும், வெளிநாடுகளில் உள்ளவர்களினதும் நலன்களை பேணுவதும் மற்றும் வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய குடும்பங்களின் ஒளிமயமான எதிர்காலம் நோக்கியும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, எமது நாட்டின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயற்பட்டு தமது பங்களிப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அமைச்சின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) கலாநிதி எம். எம். எஸ். என். யாலேகம அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் (நிர்வாகம்) திரு. ஜெ. எஸ். பிரசாத் பியசேன அவர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் திரு. ஏ. கே. யு. ரோஷன அவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். மேலும் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) திருமதி கே. ஏ. எஸ். ஹேமகாந்தி அவர்களும், சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. கே. நிகரில்காந் அவர்களும் அமைச்சினால் முன்னேடுக்கப்படவுள்ள திட்டங்களை முன்வைத்தார் கள்.
மேலும், இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்களாலும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. சி. ஜெயக்காந் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி பி. அஜிதா ஆகியோர் தத் தமது மாவட்டங்களின் நிலவரங்களை முன்வைத்தார்கள்.
இக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் கெளரவ அருண் ஹேமச்சந்திர அவர்கள் இணைய நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தாம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் தான் நேரடியாக பங்குபற்ற முடியவில்லைஎனவும், தமது அமைச்சினால் இக் கலந்துரையாடலானது களுத்துறை, காலி மாவட்டங்களில் ஆரம்பித்து வெற்றியடைந்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றுவருவதாகவும், எமது நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியினை ஈட்டித் தருவதாகவும், அந்தவகையில் ஆண்டுக்கு சுமார் 03 இலட்சம் வரையானவர்கள் செல்வதாகவும் தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைமையினை சரியான முறையில் கட்டமைக்க வேண்டிய தேவையுள்ளதாகவும், பதிவு செய்த குடும்பங்களின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும், அதேவேளை நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் பதிவு செய்யாது சென்றவர்களின் குடும்பங்களின் நலன்களிலும் கரிசனை செய்ய வேண்டிய பொறுப்பும் எமக்குள்ளதாகவும் கெளரவ பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், மக்களை பிழையாக வழிநடத்தி மோசடி செய்யும் பதிவு செய்யாத வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு கண்டுவருவதாகவும் தெரிவித்து, வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கப்படும் உயர்மட்டத் தீர்மானங்கள் கீழ் மட்டம் வரை சென்றடைய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கெளரவ பிரதி அமைச்சர் தெரிவித்து, குடிமக்களின் தேவைகளை தட்டிக்கழிக்காமல் சேவையினை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. சி. பி. ஹலபதி, சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி வசந்தகுமாரி, யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. ரி. டி. ஜீ. பிராங்கிளின், வடமாகாணத்தின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி மேற்கு (கரவெட்டி) பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (12.09.2025) வெள்ளிக்கிழமை பி. ப. 2.30 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூாி கலையரங்கத்தில் நடைபெற்றது.பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபராஷ் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலாபூசணம் திரு. கந்தன் பாலன் (மூத்தகலைஞர்) மற்றும் கலாபூசணம் செல்வி. சிவகுரு பேரின்பநாயகி (மூத்தகலைஞர் ) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.09.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கருத்துதெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த மாதம் நடைபெற்ற விவசாய குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய
விவசாய காப்புறுதி தொடர்பாக இன்றைய தினம் அத்துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.மேலும், எமது மாவட்ட பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகள் பெரும்பாலும் விவசாய துறை சார்ந்ததாக இருப்பதனால் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் விவசாயிகளின் நலன்சார்ந்ததாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், விவசாயிகளுக்கு பயிர்க் காப்புறுதி தொடர்பாக சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு விவசாய போதனாசிரியர்களுக்கு உள்ளதாகவும் அவர்களுடன் இணைந்த வகையில்
கிராம மட்டத்தில் கடமையாற்றும் பெரும்பாக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பயிர்க் காப்புறுதி தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர், விவசாயக் காப்புறுதி சபையின் யாழ் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள்,மற்றும் விவசாயத்துறைசார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.





