8அன்னை ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் மாநிறைவு வாய்ந்த நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் திறப்பு விழா இன்றைய தினம் (03 09.2025) மு.ப 10.00 மணிக்கு நாவற்குழியில் நடைபெற்றது .
இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு எஸ்.ஜே கஹவத்த அவர்களும்,யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9
Halo Trust நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வினை சிப்பா (Centre for Poverty Analysis) நிறுவனம் மேற்கொண்டுவருவதற்கு அமைவாக அதன் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் திரு மொஹட் முனாஸ் அவர்கள் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், Halo Trust நிறுவனம் 2002 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவருவதாகவும், மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் கண்ணிவெடி மற்றும் மிதிவெடிகள் இல்லை என்ற உறுதிப்படுத்தல்களை வழங்கிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும், யாழ்ப்பாண மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு நிறுவனத்தின் பங்களிப்பு க்கள் காத்திரமாக அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டு, அதன் பின்னரான செயற்பாடுகளையும் விபரமாக எடுத்துக் கூறினார்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.
 
1 2 3 4
14வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்துகொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (02.09.2025) மாலை 02.30 மணிக்கு பன்னாலை வரத்தளம் கற்பக விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், வடக்கு மகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபராஷ் அவர்களும், கெளரவ விருந்தினராக யாழ்பாண பல்கலைக்கழக கல்வியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் இசை நாடக கலைஞருமான கலாநிதி வைத்தியலிங்கம் விஜயசங்கர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் அமரா் சு.வரதராஜசர்மா அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து (விழிசிட்டி சோலைக்குயில் அவைச்சகாற்றுக் களத்தினர் ), வரவேற்பு நடனம் (கலாசார மத்திய நிலைய குழுவினர்), மங்கல இசை (அளவெட்டி ந. உதயசங்கர் குழுவினர்), கிராமிய இசை கணேசா கலைமன்றம், பல்லிய இசை விருந்து, வீரபத்திர வசந்தன் கோலாட்டம் , இசை நாடகம் (அரிச்சந்திர மயான காண்டம்), என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைச்சுடர் விருது" அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், பிரதேச விருது வழங்கல் மற்றும் பிரதேச கலைமன்றங்களுக்கான கலை ஆக்கத்திறன் போட்டிகளின் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடமபெற்றது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி வனஜா செல்வரெட்ணம் அவர்கள் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றார்.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.
மேலும் இன்றைய தினமே ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
1 2
மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் இன்றைய தினம் (01.09.2025) நாட்டப்பட்டது.
நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய 'விளையாட்டு நகரமாக' மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ சுனில் குமார கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால, வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கெளரவ சுகத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 9 10