சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mr. Fabio Molinari அவர்களுக்கும் அரசாங்க அதிபருக்குமிடையிலான திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (11.09.2025) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான பல நிகழ்ச்சித் திட்டங்களை FAIRMED நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்தல், அணுகுவசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், வாழ்வாதாரம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், மருத்துவ வசதிகளை வழங்குதல் போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் தலைமை அதிகாரி கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் FAIRMED Foundation நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களுக்காக தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தீவகப் பகுதியில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 09 பிரதேச செயலக பிரிவுகளிலேயே FAIRMED Foundation நிறுவனத்தினால் திட்டங்கள் நடைமுறைப்படுத்திவருவதாகவும் ஏனைய 06 பிரதேச செயலக பிரிவுகளிலும்நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கையினை முன்வைத்தார். இதன் போது அரசாங்க அதிபரின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக தலைமை அதிகாரி தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், FAIRMED Foundation நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி, சமூகசேவை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. தி. உமாசங்கர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி. தயாபரி, அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இ. அமலன், FAIRMED Foundation நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி. ஞா. பிரியரஜனி கள இணைப்பாளர் திரு. அ. றொணி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
 
 
1 2 3 4 5 6 8 9 10 11 
எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.09.2025) பி.ப 02.30 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை கள், ஒழுங்கமைப்பு க்கள், தொழிலற்றோருக்கான அறிவித்தல்களும் அவர்களை தொழிற் சந்தைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் போன்றன தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களினால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மனிதளவள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு.க.கருணாகரன், மாவட்ட பிரதேச மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 5 3 4 6 7 8 9 11
தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில்
இன்றைய தினம் (10.09.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறு தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் வங்கிகளில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடன் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வங்கி முகாமையாயாளர்கள், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
 
 
  1 2 3 4 5 6 7 8 
தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகாணும் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில்
இன்றைய தினம் (10.09.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறு தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் வங்கிகளில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடன் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வங்கி முகாமையாயாளர்கள், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
 
 
  1 2 3  5 6 7 8 
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி (சாவகச்சேரி) பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (10.09.2025) புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தென்மராட்சி கலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திரு. பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதிஅவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் திரு. தங்கராசா காண்டீபன் அவர்களும் , கெளரவ விருந்தினர்களாக மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலாபூசணம் சின்னக்குட்டி காசிப்பிள்ளை மற்றும் தென்மராட்சி கலை கலாசார மண்டப தலைவர் திரு. அருள்நிதி அருள்தாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
பிரபல நாதஸ்வர வித்துவான் கலாபூஷணம் கே.எம்.பஞ்சாபிகேசன் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து ,வரவேற்பு நடனம், குறத்தி நடனம் , முருகன் நடனம் , இசைச்சங்கமம் , பொம்மலாட்டம் , கதாப்பிரசங்கம் , கோலாட்டம், நாட்டிய நாடகம் என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைச்சாகரம் விருது", "இளம்கலைஞர் விருது " அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 16 17 19