இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் விளையாட்டு பாடசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விளையாட்டு அபிவிருத்திக்கான உட்கட்டமைப்பிற்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களைத் தெரிவு செய்யும் போது நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும், தொடர்ச்சியாக உரிய பராமரிப்புத் தேவை எனவும் தெரிவித்து திட்டங்களை ஆராய்ந்தார்.
இதன் போது கல்லூரி அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன் அவர்களால், கல்லூரியில் தற்போது பாவனையில்லாத நீச்சல் தடாகத்தின் புனரமைப்பின் தேவைப்பாடு, மைதானத்தின் வடிகாலமைப்பு மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லூரி சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு. எம். கோகிலதாஸ் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு. யே. நிரோஷானந், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களை இன்றைய தினம் (22.07.2025 ) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்கள்.
இச் சந்திப்பில்
ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு நிபுணர் திருமதி மக்கி சக்கியமா, திட்ட ஆய்வாளர் திரு. ருக்சன் லொவல், Alliance Development Trust இன் சமூக நீதிப் பிரிவின் தலைவர் திருமதி சாரா ஆறுமுகம் மற்றும் திட்ட உத்தியோகத்தர் ஜீன் இராஜேந்திரன் ஆகியோா் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் விவசாயம் மற்றும் மீன்பிடி துறையில் ஈடுபடும் 25 பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களை வலுப்படுத்தி தேசிய ரீதியிலான வியாபாரத்துடன் இணைப்பதற்கான செயற்றிட்டத்தினை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டு, சண்டிலிப்பாய் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து பொருத்தமான பயனாளிகளளை தெரிவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.07.2025) காலை 09.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன் போது தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், குடும்ப வன்முறைகளை குறைப்பதன் மூலம் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கொண்டு செல்ல முடியும் எனவும், பிரதேச மட்டத்தில் அடையாளம் கண்டு சரியான வழிகாட்டுதல்களை வழங்க இப் பயிற்சிப் பட்டறையினை சரியாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக சுகாதார அபிவிருத்தி காரியாலயத்தின்வைத்திய கலாநிதி காமினி விக்கிரம பங்குபற்றினார்.
இவ் பயிற்சிப் பட்டறையின் தொடக்க நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வைத்தியகலாநிதி மோகனகுமார் பங்குபற்றினார்கள்.
இப் பயிற்சி பட்டறையில் மாவட்ட பிரதேச சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றாளர்களாக பங்குபற்றினார்கள்.

பழைய கச்சேரியினை அரசாங்க அதிபருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேரடியாக பார்வையிட்டு ஆராய்வுஇதற்கு முன்னராக மாவட்டச் செயலகத்தில் 26.05.2025 ஆம் திகதி உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பின் அவசியம் தொடர்பாக - உலக வங்கி குழுவினரிடம் அரசாங்க அதிபரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான அதி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக, கடந்த இரு மாதங்களாக வடக்கின அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் செயற்றிட்டங்களையும் அதன் சாத்தியநிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து கலை கலாசார பேரணி மானிப்பாய் இந்துக் கல்லூரி வரை ஊர்வலமாக நடைபெற்றது. பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கெளரவ ஜகத் விக்ரமரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கெளரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ய. அனிருத்தனன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மானிப்பாய் இந்துக் கல்லூரி சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்தரின் துறவற வாழ்க்கையும், தமிழ் மொழி, இலக்கியம், இசை, கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும் நினைவு கூரப்பட்டன.
இந்நிகழ்வானது புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.






