அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை
திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.07.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அரசாங்க அவர்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மாணவர் கடன் பிரிவானது இலங்கையில் கா.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தால் அரசு சாரா அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப் படிப்பை தொடர வட்டி இல்லா கடன் திட்டத்தை செயற்படுத்துகின்றது எனவும், 2022 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் தோன்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் இத் திட்டத்துக்கு தகுதியானவர் ஆவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் எமது மாணவர்கள் பயன்பெறும் வகையில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் பிரிவில் இத் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களை இனம் கண்டு மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் கொழும்பிலிருந்து வருகை தரும் அமைச்சின் அதிகாரிகளால் தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளதால், அத் தெளிவூட்டல் நிகழ்விற்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து வருமாறு திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை www.studentloan.mohe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கமுடியும் என்பதுடன் ஏனைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் மாவட்ட பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பம்
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைய, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 200 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்களுக்கு வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் சிறப்பான ஒருங்கிணைப்பினை தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், ஏனைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்ட செயற்றிட்டத்தின் பின்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக, உதவிப் பொது மேலாளர் திரு. தே.வைகுந்தன் அவர்களினால் விபரமாக விபரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் 200 தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், பிரதி /உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8
தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் தொகைமதிப்பு ஆணையாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.07.2025) காலை 09.00 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
இவ் விழிப்புணர்வுச் நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இதுவரை நடைபெற்ற தொகைமதிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட மாவட்ட பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதேச புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் தனது பாரட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு, தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமும் புள்ளிவிபரத் தரவுகளை இற்றைப்படுத்தியதில் முன்னிலை வகித்துள்ளதாக பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், தொகைமதிப்பு நடவடிக்கைகளை
விவசாயம் சார்ந்த மற்றும் விவசாயம் சாராத தரவுகள் என வகைப்படுத்தி இவ் வருடத்தை விவசாயம் சார்ந்த தொகைமதிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இத் தரவுகள் தேசிய ரீதியாக மொத்த தேசிய வருமானத்தில் மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்களிப்பு செய்வதால் வகை மற்றும் தொகை ரீதியான இவ்விபரங்கள் உரிய காலத்தில் அல்லது அதற்கு முன்னர் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுமென வலியுறுத்தி தெரிவித்ததுடன் இச் செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்ள அனைவரது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதிப் பணிப்பாளர் (மாகாண இணைப்பாளர்) திரு. அனுருத்த வீரதுங்க, சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர் (வளவாளர்) திரு.எஸ்.தனபாலசிங்கம், தொகைமதிப்பு புள்ளி விபரத் திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம். வித்தியானந்தநேசன், மாவட்ட விவசாய ப் பணிப்பாளர் திருமதி பி. பவலீஸ்வரன்,
பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள், தொகைமதிப்பு புள்ளி விவர திணைக்கள மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
 
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை ஆரம்பம்
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைய, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 200 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்களுக்கு வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் சிறப்பான ஒருங்கிணைப்பினை தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், ஏனைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்ட செயற்றிட்டத்தின் பின்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக, உதவிப் பொது மேலாளர் திரு. தே.வைகுந்தன் அவர்களினால் விபரமாக விபரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் 200 தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார், பிரதேச செயலாளர்கள், பிரதி /உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (07.07.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் திரு. இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு - அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா ஒருவருக்கு ரூபா 90,000
வீதம் சாவகச்சேரி, நல்லூா் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய 05 குடும்பங்களைச் சேர்ந்த எட்டுப் பேருக்குமாக ரூபா 720,000.00 கொடுப்பனவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
1 2 3 4 5 6