வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய வர்கள் புதிய தொழிலை தொடங்குவதற்கான / தொழிலை விருத்தி செய்வதற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 9.00 மணிக்கு மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறை ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட் இணைப்பாளர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்
( யாழ்ப்பாணம்) தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 
 4 5
மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் - மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் அப் போட்டியில் பங்குபெறும் 14 வீர வீராங்களை இன்று காலை 6.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
இதன் போது மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு தி. உமாசங்கர், பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்களான திருமதி ஆர். தர்மினி திருமதி பா. சிவதர்சினி மற்றும் திருமதி எஸ்.சுமதி உடனிருந்தார்கள்.
 
1 2 3 
 
4 5
யாழ்ப்பாண மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.06.2025) மு.ப 11.00 மணிக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள செயற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது எனவும், அதற்கமைவாக வர்த்தகர்களுடன் இன்றைய கலந்துரையாடலை நடத்ததுவதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மத்திய பொருளாதார மத்திய நிலையத்தை மீள செயற்படுத்துவதற்கு வேண்டிய பூரண ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிப்பது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து விவசாயம் மற்றும் பழ வகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கும் ஏனைய இடங்களுக்கும் அனுப்பிவைத்தல் மற்றும் வெளி மாவட்ட உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்துவந்து சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய நிர்வாகக் குழுவும் மீளமைக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலுக்கு முன்பதாக பொருளாதார மத்திய நிலையத்தினை கெளரவ அமைச்சர் அவர்கள் கெளரவ ஆளுநர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், துறைசார் அதிகாரிகள் மற்றும் கடையினை வாடகைக்கு எடுத்த குத்தகைக்காரர்கள் சகிதம் பார்வையிட்டனர்.
இக் கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச செயலாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளா், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5
பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 16 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம் தலைவர் திரு அப்புத்துரை அருந்தவநேசன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (14.06.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட பகிரங்க சேவைகள் ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் திரு. சி. சந்திரராஜா அவர்களும், கெளரவ விருந்தினராக ஓய்வூதிய அலுவலர் திரு ஜே. பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக மூத்த ஓய்வூதியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
 
 
1 2 3 4 5 6 7 8 9
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம் (14.06.2025) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக திரு. சுந்தரமூர்த்தி கபிலன் அவர்களுக்கான நியமனக் கடிதம் கெளரவ அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், கெளரவ அமைச்சர் அவர்களின் உத்தியோகத்தர் கள் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.
 
1 2 3 4 5 6