கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (19.06.2025) காலை 09.00 மணிக்கு அந் நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீலானி திசேர, யாழ்ப்பாணத்தின் பணிப்பாளர் அருட்தந்தை அன்றோ டெனிசியஸ் மற்றும் குழுவினர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களும் உடனிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் கரித்தாஸ் - கீயூடெக் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தி வரும் செற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாக விவசாயம் சார்ந்த செயற்றிட்டங்கள் வீட்டுத் தோட்டம், பாடசாலை தோட்டம் போன்றவற்றிக்கு வழங்கிவரும் பங்களிப்புகள் தொடர்பாக நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளரால் எடுத்துக்கூறப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமானது கழகத்தின் தலைவரும் உதவி மாவட்டச் செயலாளருமான செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.06.2025) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் அரசாங்க அதிபரும் கழகத்தின் போசகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பங்குபற்றி நலன்புரிக் கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபையானது தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபையின் விபரங்கள் :
தலைவர் : திரு. ம. வித்தியானந்தநேசன் (பிரதிப் பணிப்பாளர், புள்ளிவிபரத் திணைக்களம்)
உப தலைவர் : திரு. நி. பிரபாகரன் (மேலதிக மாவட்டப் பதிவாளர்)
செயலாளர் :திருமதி கி. தயாபரி ( மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்)
உப செயலாளர் : திரு. க. சுபாகரன்
பொருளாளர் : திரு. உ. சுமன்
உப பொருளாளர் : திருமதி ஜெ. சிவகெளரி
விளையாட்டுச் செயலாளர் : திரு. எம். நிமலன்
நலன்புரிச் செயலாளர் : திருமதி வி. சுகுணாளினி
நிர்வாக சபை உறுப்பினர்கள் :
1.திரு நா. குகதாசன்
2.திருமதி எஸ். நிர்மலா
3.திருமதி க. குணதர்சனா
4.திரு பே. குகணேசர்
5.திரு. அ. தர்மேஸ்வரன்
6.திரு அ. நிறோஸ்

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2025.06.26 ஆம் திகதி தொடக்கம் 2025.07.11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்து எனத் தீர்மானிக்கப்பட்டது.
1.நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2.குடிநீர் தேவைப்பாடுகள் - ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சீராக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் - அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
4.பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
5.ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
6.சாரணர்களின் சேவைகளைபெற்றுக்கொள்ளவது தொடர்பாகவும் முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
7.திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் எனவும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்கு செய்யப்பட்டது.
8.குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
9.திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில்திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
11.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
12.ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
13.நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வது எனவும், தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
14.நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
15.பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
16.அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
17.மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் திரு. சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது காலாண்டுக்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.06.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், முதலாம் காலாண்டுக்கான நிதி முன்னேற்றத்தினையும், இரண்டாவது காலாண்டுக்குரிய நிதி விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்வதுமே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மேலும், நிதி முகாமைத்துவம், கட்டுப்பாடுகள் உரியவகையில் பின்பற்றப்பட வேண்டும் என்பதனையும் ஆராய்வது அவசியமானது எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான கடமைகள் மூலம் வேலைத் திட்டங்களுக்கான நிதி முன்னேற்றங்களை முழுமையாக இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், பழைய பூங்காவில் சுற்றாடல் தினமான யூன் 05 இல் முதற்கட்டமாக 200 மரங்கள் நாட்டப்பட்டதனை குறிப்பிட்டு, ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் ஒவ்வொரு மரத்தினை பொறுப்பேற்று சீராக நீர் ஊற்றிவருவதனையும், சில உத்தியோகத்தர்கள் தமது பிள்ளைகளுடன் விடுமுறை நாட்களில் வந்து நீர் ஊற்றிச் செல்வதனையும் அவதானித்த போது அவர்களின் சமூகப் பொறுப்பினை உணரக்கூடியதாக இருப்பதாகவும், இதன் மூலம் தமது கடமைகளிலும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயற்படக்கூடியவர்கள் என்பது புலனாகுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கணக்காளர் திரு. நிர்மல், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையி லான உளசமூக மன்றகலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னரான பாரிய தேவைப்பாடு ஏற்பட்டது எனவும், அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பு காத்திரமானது எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது உள ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடுகள் அதிகம் உணரப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கூட்டுப் பொறுப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இக் கலந்துரையாடலில் நோக்கமானது உளவளத்துணை மற்றும் உளசமூகப் பணிகளை இணைந்த வகையில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதுடன், இவ் வேலைகளில் காணப்படும் இடைவெளிகளை இனங்கண்டு உளநலத் தேவைகளை நிவர்த்தி செய்யவதற்கான கலந்துரையாடலாக அமைவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க.கஜவிந்தன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு. பரா.நந்தகுமார், உள மருத்தவ வைத்திய அதிகாரி திருமதி அ. வினோதா, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு ந.உதயகுமார் , அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






