78வது சுதந்திர தின மாவட்ட நிகழ்வு - 2025
சுற்றுலா வழிகாட்டி நூல்
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா - 2025
60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர்

திரு.ம.பிரதீபன்
திரு.ம.பிரதீபன்
மாவட்டச் செயலகம்
SLAS விசேட தரம் ( I )
 

மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வாணி விழா-20.10.2026

1

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கழகத்தின் தலைவரும் கணக்காளருமான வ. ரதீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.10.2026) மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜையினைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், உத்தியோகத்தரின் மழழையின் தனிப் பாடல் மற்றும் உத்தியோகத்தர்களின் குழுப்பாட்டு, பல்லியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வில், நவராத்திரி விழாக்கள் உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதுடன், தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நவராத்திரி பூஜை நிகழ்வுகளையும், வாணி விழாவை முன்னிட்டு உத்தியோகத்தர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலை மற்றும் கலாசாரப் போட்டிகளையும் பாராட்டினார். இத்தகைய நிகழ்வுகள் வெறுமனே விழாக்களாக அமையாமல், அலுவலகங்களுக்கிடையிலான நட்புறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தளங்களாகவும், தமிழர் பண்பாட்டு கலைப் களையும் மறக்காமல் வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.see more...

Events

News

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா-2026

22 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா-2026 இடம் : மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் காலம் : 23.10.2026 வெள்ளிக்கிழமை நேரம் : பி.ப 1.00 மணி - தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம் (மருதடிப் பிள்ளையார் ஆலயம், றக்கா வீதி) பி.ப 1.30 மணி - அரங்க நிகழ்வு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்    

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான மூன்றாம் காலாண்டுக் கூட்டம்

22 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபரின் தலைமையுரை : மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகப் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதுடன்,...

யாழ். மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: விவசாய அபிவிருத்தி, கடன் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்புறுதி குறித்து ஆராய்வு

22 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் எனவும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு...

யாழ். மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்: விவசாய அபிவிருத்தி, கடன் திட்டங்கள் மற்றும் பயிர்க் காப்புறுதி குறித்து ஆராய்வு

22 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் எனவும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு...

யாழ்ப்பாண மாவட்ட சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்ட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம்

22 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் கடலோர சமூகங்களை சுனாமி அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தயார்படுத்துவதற்கான 'UNESCO-IOC சுனாமி தயார்நிலை அங்கீகாரத் திட்டம் (TRRP) தொடர்பான விசேட மாவட்டப் பங்குதாரர்கள் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.10.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் அறிமுகவுரையினை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்...

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்புறுதிப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

22 அக்டோபர் 2026

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.10.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தலைமையுரை : யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும்,...

மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வாணி விழா - 2026

21 அக்டோபர் 2026

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கழகத்தின் தலைவரும் கணக்காளருமான வ. ரதீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.10.2026) மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜையினைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், உத்தியோகத்தரின் மழழையின் தனிப் பாடல் மற்றும் உத்தியோகத்தர்களின் குழுப்பாட்டு, பல்லியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அரசாங்க அதிபர் உரை : யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா...

யாழ். மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் - 2026 : முன்னாயத்தக் கலந்துரையாடல்!

21 அக்டோபர் 2026

விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் (2026) தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதுவரை நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த இச்சுற்றுத் தொடர், இவ்வாண்டு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போட்டித் தொடரை இவ்வாண்டுக்குள்...

யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் கூட்டம்: குடிநீர், வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆராய்வு – துரித நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தல்

19 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் விநியோகம், வெள்ளநீர் தேங்கும் வீதிகள், வீடுகள் மற்றும் காணிகளற்ற குடும்பங்களின் நிலைமை உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய மாவட்ட திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்று (16.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வரவேற்புரை : இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு

19 அக்டோபர் 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்று (16.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன. இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப்...

« »
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழா' இன்றைய தினம் (15.01.2026) வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதோடு ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டதோடு அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கல் பொங்கும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ் மக்களின் தனித்துவமான கலை, கலாசாரங்களை வெளிப்படுத்தும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில், அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ,யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு .எஸ்.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு .அ.உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களத் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10

 1 2 3

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (26.12.2025) பி.ப 01.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கெளரவ தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்ட செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி என்பது முதன்மையான இடத்தை பெற்றுள்ளதாகவும் அந்த வகையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளின் பிரகாரம் மாவட்ட, மாகாண நிர்வாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருட இறுதி நாட்களில் இங்கு கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயல்களுக்கான செலவீனங்களாக மீண்டெழும் செலவினமாக 2473.90 மில்லியன் ரூபாவும், மூலதன செலவீனமாக 227 மில்லியன் ரூபாவுமாக மொத்தமாக 2700.90 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், நேற்றைய தினம் வரை அதற்குரிய செலவீனமாக 2625.20 மில்லியன் ரூபா செலவழித்துள்ளதாகவும் 93.5 % மான நிதி முன்னேற்றத்தை எட்டி உள்ளதாகவும், மிகுதி செலவீனங்களை வேலை நாட்களுக்குள் செலவழிக்க உறுதிச் சீட்டுகள் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏனைய அமைச்சுக்கள் சார்பாக மீண்டும் வரும் செலவீனமாக 2527 மில்லியன் ரூபாவும், மூலதன செலவீனமாக 2649.30 மில்லியனுமாக
மொத்தம் 5168.80 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் நேற்றைய தினம் வரை 4210 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதாகவும், 81.5 % மான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தீவு பகுதிக்கான அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை செலவு செய்வதில் வெள்ள இடர்பாடு காரணமாக சில போக்குவரத்து இடர்பாடுகளை எதிர்கொண்டதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மொத்தமாக 7869.8 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் 6735.80 மில்லியன் ரூபா இதில் செலவு செய்துள்ளதாகவும் 86% மான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மேலதிகமாக அனர்த்த நிலைமை காரணமாக யாழ்ப்பாண
மாவட்டத்தில் 20023 குடும்பங்களில் 64,498 பேர் பாதிப்புக்குள்ளானதாகவும் தெரிவித்தார். மேலும், அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கியதாக அமைந்துள்ளதாகவும், மாவட்ட அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கிய கௌரவ அமைச்சர், ஆளுநர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்,கிராம மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் இன்றைய கூட்டமானது பௌதீக ,நீதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன் அடுத்த வருடமும் மாவட்ட அபிவிருத்தி பணியில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், வெள்ள அனர்த்தத்தின் நிலைமையிலும் அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியதில் மேம்பாடு காணப்படுவதாகவும், வெற்றிகரமான அபிவிருத்தி நோக்கிய பயணம் காணப்படுவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனக்குறிப்பிட்டு தமது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், "டித்வா" புயல் அனர்த்தத்தின் போது உயரிழந்த பொதுமக்கள், மீட்புபணியில் ஈடுபட்ட கடற்படை மற்றும் மின்சார சபை ஊழியர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அரசாங்க உத்தியோகத்தர்கள் செய்யமாட்டார்கள் என்று சொல்லப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் தவிடுபொடியாகும் வகையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓரணியில் அனர்த்த நிலைமைகளில் செயற்பட்டமைக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டம் வரவு செலவு திட்டத்தின் வேலைத் திட்டத்தில் நிதி மற்றும் பெளதீக முன்னேற்றத்தில் 100 % காண்பித்து தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்காக அரசாங்க அதிபர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டம் வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில், அனர்த்த நிலைமைகளில் சில காலதாமதம் ஏற்பட்டாலும், 2025 ஆம் ஆண்டினை கற்றுக் கொண்ட பாடத்திற்கு அமைவாக, அடுத்த வருடம் முறையான திட்டமிடலுடன் அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும் எனவும், அபிவிருத்தி மாத்திரமின்றி சமூகத்தின் பல்வேறுபட்ட சமூக அழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் எனவும் அதற்கான ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நகர அபிவிருத்தி திட்டம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட விடயங்கள், தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களும் மற்றும் எல்லைதாண்டி மீன் பிடி உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) நிறுவனத்தின் அனுசரணையுடன் தீவகத்தின் வேலணை, காரைநகர் ஊர்காவற்துறை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் 'சுய உதவிக் குழு அணுகுமுறை ஊடாக பெண்களை வலுப்படுத்துவதனூடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் தீவக வலய 25 ஆசிரியர்களுக்கான பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறியின் இரண்டாம் கட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (10.11.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பிள்ளை நேய கற்பித்தல் என்பது நடைமுறையில் ஏற்கனவே காணப்படுவதாகவும் அதனை மேலும் வலுப்படுத்தி விருத்தி செய்யவேண்டிய தேவை காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன், தீவக பகுதி மாணவர்கள் தனித்துவமுடையவர்களாக காணப்படுவதகாவும் அவர்களுக்கு கற்பிக்கும் அசிரியர்கள் வினைத்திறனாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும் எனவும் ஆசிரியத்துவம் நோக்கிய செயற்பாடு பிள்ளையின் நன்மை நோக்கியதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கல்வி செயற்பாடுகளை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதன் ஊடாக பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே இருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்ததுடன் இச் செயலமர்வை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் இப் பயிற்சி நெறியை சிறப்பாக பயன்படுத்தி பயனை பெற்றுக்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு கலாநிதி.பா.தனபாலன், யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.கு.கமலநாதன், யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.ந.தயாபரன், வேலணை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி.நா.கிருஸாந்தினி, யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3
 

உட்பிரிவுகள்

Emergency Operation Centre

Disaster Management Centre, Jaffna

AGENCY / DIVISION

NAME OF OFFICER

TEL NO

FAX

 

MOBILE

(DSs)

EMAIL IDS

Government Agent, Jaffna

Mr. K. Mahesan

021-2222235

021-2222355

0773996124

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Addl, Government Agent-

Admin Coordination

Mr.M. Piratheepan

021-2222236

021-2222236

0777570144

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Addl, Government Agent- land –

Disaster Relief Coordination

Mr.S. Muralitharan

021-2212631

021-2212631

0776539952

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Assistant District secretary

Mrs. S.C.N.Kamalarajan

021-2222771

021-2223625

0779156056

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

District Assistant Director - DMC

Mr. T.N. Sooriyarajah

021-2221676

021-2117117

0773957894

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Delft

Mr.F.C. Sathiyasothi

021-2215201

021-2212501

0777283687

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Velanai

Mr.A. Sothinathan

021-3214164

021-2229974

0773618499

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Kayts

Mrs. S. Manchuladevi

021-2211602

021-2211601

0762114949

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Karainagar

Mr. M.Jegu

021-2211727

021-2211727

0773868585

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Jaffna

Mr.S. Sutharsan

021-2228469

021-2221035

0773548347

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Nallur

Mrs. Anton Yoganayagam

021-2229801

021-2222208

0779789376

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Sandilipay

Mrs. U.Yasotha

021-2255550

021-2224994

0776404374

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Chankanai

Mrs. P.Premini

021-2250999

021-2250063

0776660608

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Uduvil

Mr.T.Mugunthan

021-2242044

021-2240195

0774939454

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Tellippalai

Mr.S. Sivasri

021-2242002

021-2241726

0772487453

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Karaveddy

Mr.E.Thayarupan

021-2264453

021-2263258

0773999430

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Kopay

Mrs. M. Subajini

021-2230013

021-2231211

0779898997

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Chavakachceri

Mrs. S. Usha

021-2270011

021-2270050

0777769984

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Point pedro

Mr.A.Sri

021-2260215

021-2263259

0718172494

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Divisional Secretary - Maruthankerny

Mr.K.Pirabakaramoorthy

021-3205533

021-2260501

0765370375

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.