அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் யாழ்மாவட்டத்திலுள்ள பத்து முதியோர், சிறுவர் இல்லங்களுக்கு வழங்குவதற்கான தலா ரூபா 100,000/= வீதம் ஒரு மில்லியன் பெறுமதியான சுகாதாரப் பொருட்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் ஊடாக வழங்கி இன்று (12.05.2020) வைக்கப்பட்டது.

IMG 20200512 WA0002

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டின் பிரகாரம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினரால் யாழ்மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பாவனைக்காக ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் போன்றவை இன்று (10.05.2020 ) யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஹுமெடிக்கா நிறுவனத்தினால் களமுனை உத்தியோகத்தர்களுக்கான 3,900 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. இவற்றில் தலா  400 வீதம் யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில்  மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர்களிடம் யாழ் மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் மற்றும் ஹுமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்டன. மேலும் 1300 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும், 1000 முன்னிலை சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.

பிரதேச புள்ளிவிபர கைநூல் 2020 மற்றும் பிரதேச மூலவளத் திரட்டு 2020 ஆகியவற்றைத் தயாரித்ததில் யாழ்ப்பாண பிரதேச செயலகம், பதினைந்து பிரதேச செயலகங்களில் முதல் நிலையில் உள்ளது.

30-04-2020 வியாழக்கிழமை அன்று  யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன், உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தத்துடன் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

1• அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

அகில உலக மருத்துவர் நல அமைப்பினால் யாழ் மாவட்டத்தில் உள்ள 24 நாலன்புரி நிலையங்களில் வசிக்கும் 410 குடும்பங்களும் மற்றும் நலன்புரி நிலையங்களில் வசித்து வெளியேறிய 310 குடும்பங்களுமாக மொத்தம் 720 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபா வீதம் ரூபா 720,000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. த. சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளித்தார். இவை உடனடியாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் பொதி செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.