விடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வானலை ஊடான கற்பித்தல் நிகழ்ச்சிநிரல்.

(A sky-wide teaching agenda for schoolchildren during the holiday season)

eye testவிக்கிரமராட்சி அன்ட் கம்பனியினால் யாழ்மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 11.03.2020 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெற்றது.

 

கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் 17.03.2020 காலை 8.30மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

  • உத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும் பொதுமக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

1நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்துயாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல்  இன்று காலை (13.3.2020) யாழ்மாவட்ட செயலக அரசாங்க அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் உயர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள், கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியாக அதிகரித்த நிலையில் இலங்கையும் அது தொடர்பாக பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஒவ்வொரு மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.