தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் பா. செந்தில்நந்தனன் அவர்களினால் 01.10.2019 ( செவ்வாய்க்கிழமை) யா. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா. ஆழியவளை சீ.சீ.த.க.வித்தியாலயம், யா.வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா. கட்டைக்காடு றோ.க.த.க ஆகிய பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" இன்று 17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்
தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இ சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் “சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை” 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 – பி.ப 3.30 வரை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சும், jica நிறுவனமும் இணைந்து "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் தலைமையில் 05.09.2019 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவி உத்தியோகத்தர்களிற்காக 12 நாட்கள் வழங்கப்படுகிறது.
யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் 10 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழா வியாழக்கிழமை (1-08-2019) அன்று மதியம் 2 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் கலந்துகொண்டார்






