LOGO31.10.2019 ம் திகதிய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020 ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்பந்தமான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட பதிவிற்கான இறுதித் திகதி 24.12.2019 ம் திகதி வரை காலநீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 - 19.11.2019 ஆகிய காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ  அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் சகிதம்  இருபத்துநான்கு மணி நேரமும்  இயங்கக்கூடிய  அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண  அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில்  நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை  அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் பயிற்சி நெறி 09-10-2019 தொடக்கம்  11-10-2019 வரை   மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .

081119 3தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும்  இளைஞர் அலுவல்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட  பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்" 06.11.2019 ( புதன்கிழமை ) அன்று யா.நெடுந்தீவு மகா வித்தியாலயம், யா.நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, நெடுந்தீவு மங்கயகரசி வித்தியாலயம் மற்றும் யா. நெடுந்தீவு சிவப்பிரகாச வித்தியாலயம்  ஆகிய பாடசாலைகளில்  தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின்  செயலாளர் வீ.சிவஞான சோதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

21019 4தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும்  இளைஞர் அலுவல்கள்  அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட   " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் பா. செந்தில்நந்தனன் அவர்களினால் 01.10.2019 ( செவ்வாய்க்கிழமை) யா. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, யா. ஆழியவளை சீ.சீ.த.க.வித்தியாலயம், யா.வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா. கட்டைக்காடு றோ.க.த.க ஆகிய பாடசாலைகளில்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.