"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக் கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில்  "தேசிய பாதுகாப்பு தினம்" இன்று (2019.12.26) காலை 9.15 க்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமியால் 2004.12.26 ஆம் திகதி உயிரிழந்த மக்களிற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. இப் பிரார்த்தனையில் மதகுருமார்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி),பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

 

award 1

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற லக் ரெக்கிய ஹரசர தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திணைக்களத்தின் பிரதான இலக்கான மனிதவளத்தினை வினைத்திறன் வாய்ந்ததாக முதலிடும் வகையில் செயலாற்றிய 25 மாவட்டங்களிற்குமான தொழில் நிலையங்களிற்கான தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்ட தொழில் நிலையம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கவிருதினை வென்றுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் "மாவட்ட  ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டம்" 23.12.2019 (திங்கட்கிழமை) காலை பத்து மணிக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம் தொடர்பாக கலைந்துரையாடப்பட்டது. மேலும்  கல்வி , நீர் விநியோகம், போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர  அபிவிருத்தி அதிகார சபை மற்றும்  உள்ளூராட்சி சபைகள், வர்த்தகம், தொழிற்துறை வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

1 meeting 24யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிகழ்கின்ற செயற்பாடுகளை  கட்டுப்படுத்தல்   தொடர்பான கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24.12.2019)  காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்  நடைபெற்றது.

சட்டவிரோதமான மணல்  அகழ்வு, வாள்வெட்டு குழுக்களின் அச்சுறுத்தல்கள், போதைப்பொருள் பாவனை  தொடர்பாக  ஆராய்ந்து இவற்றை  கட்டுப்படுத்தல் இக் கலந்துரையாடலின்  நோக்கமென கௌரவ  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி சிறுவர் கழக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான கௌரவிப்பு 17.12.2019  ( செவ்வாய்க் கிழமை )  காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் ( காணி), பிரதம கணக்காளர், மாவட்ட செயலக சமுர்த்தி பணிப்பாளர், கிருபாகரன் ( கிருபா லேணர்ஸ்) , பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டார்கள்.