யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E - Personal File தொடர்பான பயிற்சி நெறி உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி தலைமையில் இன்றைய தினம் (28.05.2025) மு.ப. 9.00 மணிக்கு மாநாட்டு நடைபெற்றது .
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து கருத்து தெரிவிக்கும் போது, E - Personal File முறைமை ஊடாக தனிநபர் கோவையினை கணினி முறையில் பேணுவதனால் உத்தியோகத்தர்களின் வேலைப்பழு குறைவடைவதுடன் வினைத்திறனான சேவையினை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் இம்முறைமையினை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இப் பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ள உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இம் முறைமை நல்லூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரால் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இப்பயிற்சி நெறியின் வளவாளராக வும் கலந்து கொண்டார்.
இப் பயிற்சி நெறியில் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட கோவையினை பேணும் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்றைய தினம் (27.05.2025) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.
இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அரசாங்க அதிபரிடம் கெளரவ அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை கெளரவ அமைச்சரின் கவனத்திற்கு அரசாங்க அதிபர் கொண்டுவந்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் போராசிரியர் கே. பி. எல். சந்திரலால் அவர்கள் இன்றைய தினம் ( 27.05.2025)காலை 08.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித குமாரசிங்ஹ மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமனகே ஆகியோர் உடனிருந்தார்கள்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2025)காலை 09.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவதுகாலாண்டுக்கான கூட்டம் இதுவெனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினானது மாவட்டச் செயலகத்துடன் நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டு, ஆணைக்குழுவிற்கு நன்றியினைத் தெரிவித்ததுடன், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 18.3% மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான பங்குதார்கள் கூட்டத்தில் பங்குபற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் தேவையான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மின்சார கட்டண முறைமை அதாவது விலைச் சூத்திரத்திற்கு அமைய, பொது ஆலோசனைக் கேட்டலை ஆணைக்குழு நடத்துவதால் இக் கூட்டத்தில் ஜனநாயக முறையில் மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதனூடாக தீர்வுகளை முன்வைப்பது ஆரோக்கியமானது எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் முன்னறிவிக்கப்பட்ட உற்பத்தி கலவை மற்றும் செலவுகள், எரிபொருள் செலவுகள், பரிமாற்றம் மற்றும் விநியோகச் செலவுகள், நிதிச் செலவுகள், 2024 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான வருமான உபரி, 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டின் நிதி இழப்பு, முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு முறை, கட்டண சமர்ப்பிப்பு குறித்த ஆணைக்குழிவின்ஆராய்வு மற்றும் முன்னேற்றத்திற்கான பங்குதாரர் திட்டங்கள் தொடர்பாக 09 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வேலணை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் (நிர்வாகம்), கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. லக்ஸ்மன் அபயசேகர அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (26.05.2025) காலை 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் சாா் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது, குறிப்பாக அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி , சுற்றுலாத்துறை மேம்பாடு , தாழையடி குடிநீர்த்திட்டம் , தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள், வங்கிக் கடன் முறைமை ,தொழில் தேடுவோருக்கான வேலைத்திட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் தலைமையில் மு. ப 11.15 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை இனங்காணல்,நிதி சாா்ந்த விடயங்களை வங்கிகளுடன் கலந்துரையாடல் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில் முயற்சி அபிவிருத்தி மேம்பாடு, ஏற்றுமதி , பல்கலைக்கழகங்களில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல், பாடசாலைகளில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பிரதிப்பணிப்பாளர் திரு.வசந்த சேனா நாயக்க உதவிப்பணிப்பாளர் திரு.சசிகதிமெல் மற்றும் குழுவினர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, கைத்தொழில் அதிகார சபையின் மாகாணப்பணிப்பாளர் மற்றும் மாவட் உதவிப்பணிப்பாளர், மாவட்ட உதவி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் உதவிப்பணிப்பாளர், வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், வங்கிகளின் பிரதிநிதிகள் , தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.






