8சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடனான சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றக் கூட்டம் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.07.2025) மு.ப 11.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் ஆராய்ந்தார்.
மேலும், சமுர்த்தி முகாமையாளர்களால் நிர்வாக ரீதியான செயற்பாட்டிற்கான கணினி மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்க அதிபர் அவர்கள் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முகாமையாளர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறி கலந்துரையாடினார். மேற்படி கோரிக்கைகளை இவ்வாண்டுக்குள் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக அரசாங்க அதிபரால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்டச் செயலக விடய சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு சமுர்த்தி முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 
மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் நிலையங்களை பதிவு செய்யவும் மதிப்பீட்டுக்குமான பிரதிப் பணிப்பாளர் திரு. சம்பிக்க குணதிலக்க அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (25.07.2025) ஆம் திகதி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்றாம்நிலை கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பற்றி கலந்துரையாடியதுடன், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யவும் அது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடாத்தவும் அரசாங்க அதிபர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்படாது தொழிற்கல்வியை நடத்திவரும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலுடன் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பணிப்பாளுடன், உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். கல்பேச், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் திரு. கே. நிரஞ்சன் மற்றும் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர்
திரு. த.நீலாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3
றேக் ஓட்டோ கண்காட்சி (RAKS AUTO SHOW ) - 2025
றேக் ஓட்டோ கண்காட்சியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் (25.07.2025) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினமன் குளோபல் பி.வி.ரி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. சோனல் வீரக்கொடி, டிமோ லங்கா சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் திரு.சாலக்கா போகோடா அவர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 78 9
6இரசாயனம், உயிரியல், கதிர்வீச்சுஅழ மற்றும் அணுக்கசிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கையாள்வது மாவட்ட மட்ட கட்டமைப்பை உருவாக்கல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.07.2025) காலை 08. 45 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தத்தின் போது ஒத்துழைப்பு நல்கிய முப்படையினருக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ள அனர்த்தத்துடன் ஒப்பீடு செய்யும் போது, இரசாயனம் மற்றும் கதிர்வீச்சு, அணுகசிவு போன்ற இடர்களுக்கு எதிர்காலத்தில் பதிலிறுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கபடவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் தீவுப்பகுதியில் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயன பாதிப்பு தொடர்பான விழிப்பணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை எனவும் அதேபோல் அணுக்கசிவு மற்றும் கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வும் பெரும்பாலான மக்களுக்கு இல்லாத காரணத்தினால், முதற்கட்டமாக குறிப்பிடப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இச் செயலமர்வு மிக முக்கியம் எனவும் தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வுச் செயலமர்வின் வளவாளர்களாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு. சான் பத்திரன மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என் சூரியராஜா அவர்களும் பங்குபற்றினர். மேலும் இரசாயன, உயிரியல், அணுக்கசிவு, மற்றும் கதிர் வீச்சு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட மட்ட எதிர்கால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை தொடர்பாக பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என் சூரியராஜாவால் விபரிக்கபட்டது.
இச் செயலமர்வில் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், வைத்தியர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 45 6 7 8