Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்..Seemore...
Events
News
Government Service Centers
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு நேற்று (14.09.2020) மாலை விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு திட்ட தொடர்பிலான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
|
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், 14.09.2020 அன்று வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை திரை நீக்கம் செய்து இன்று 01.09.2020 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததோடு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து 2019 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 160 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சனச அபிவிருத்தி வங்கியினால் அம் மாணவர்களுக்கு பரிசில் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் 19 அனர்த்த சூழ்நிலை காரணமாக வழமையாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வந்த இந் நிகழ்வு இம் முறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |











