Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்..Seemore...
Events
News
Government Service Centers

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அரசஅதிபர்
நாளை நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ் மாவட்டம் கொரோனா கட்டுப்பாடு பேணப்பட்டு வரும் நிலையில் இந்த நிலைமையை தொடர வேண்டிய நிலையும் காணப்படுகின்றது .
யாழ். மாவட்டத்தின் தேர்தல் தற்போதய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சந்திப்பு இன்றையதினம் (23.07.2020 ) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.யாழ் தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 25 ஆம் திகதிக்கு பிறகு யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மத்திய முறைப்பாட்டு நிலையத்துக்கு மேலதிகமாக பன்முகப்படுத்தப்பட்ட வகையில் மேலும் மூன்று முறைப்பாட்டு நிலையங்களை சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களிலே வெளிமாவட்டத்தில் இருந்து விசேடமாக வரவழைக்கப்படுபவர்களுடன், யாழ் மாவட்ட அலுவலர்களும் இணைந்து கண்காணிப்பு மற்றும் முறைப்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (14.07.2020) யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு, தெரிவத்தாட்சி உத்தியோகத்தரும் மாவட்ட அரசாங்க அதிபருமான க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உட்பட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தற்போது கொரோனாஅபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில்இ யாழ்ப்பாணத்தில் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் ஆரம்பத்தில் 16 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூன்று குடும்பம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும்இ ஒரு குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையிலும்












