Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்..Seemore...
Events
News
Government Service Centers
பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபரை 02.07.2020 அன்று சந்தித்து கலந்துரையாடினர் .வடக்கில் அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா இடர் நிலைமையின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது மற்றும்

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மிகச்சிறப்பான முறையில் நம்மோடு வாழ்ந்த அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களின் மறைவு அனைத்து மட்டங்களிலும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பன்முக ஆற்றல் கொண்ட அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்கள் தன்னுடைய தனித் திறமையினால் அனைவரது மனங்களையும் வெற்றி கொண்டதோடு நிர்வாக ரீதியாக மிகச் சிறப்பான முறையிலே செயற்பட்டு, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தார் என்பதுடன் பல நிர்வாகிகளை உருவாக்கியும், ஆற்றுப்படுத்தியும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை இம்மண்ணிற்கு ஆற்றியுள்ளார்.
Second quarter meeting of the Audit & Management Committee for the year 2020 was held on 26.05.2020 at 2.00pm under the chairmanship of the Govt. Agent, Jaffna District at the District Secretariat’s Auditorium. Head of the branch & Divisional Secretaries of the Jaffna District participated in the meeting. Govt. Agent said that this Audit Management Committee Meeting is guidance for our duties to check & correct our performance whether we perform correctly or not. If any correction we rectify the issues on District level. We have responsible for accountability of public fund. Therefore, every one performs duties based of Laws , Rules & Regulations.
யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வு அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம் திகதி "உயிரியல் பல்வகைத்தன்மை - இயற்கையின் ஓரிடம்" என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்டது.
நாடளாவிய ரீதியில் யூன் ஐந்தாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல் தினத்தை நடத்த முடியாமையினால் இன்றைய தினம் 09.06.2020 யாழ். மாவட்ட செயலகத்தில் சுற்றாடல்தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரினால் மரம் நாட்டி வைக்கப்பட்டதோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றது.











