Government Agent/District Secretary

Mr.M.Piiratheepan
ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு – ‘அகன்று செல்’ செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டு சர்வமத மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது! போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அகன்று செல்” தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவையொட்டிய மதிப்பீட்டு சர்வமத மாநாடு, அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (05.11.2026) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 'ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் உரையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், இன, மத, வயது வேறுபாடுகளைக் கடந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் போதைப்பொருள் அச்சுறுத்தல் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாகவும் வழிபாட்டுக்குரியவர்களாகவும் கருதப்படுபவர்கள் மத்தியிலும் இவ்வச்சுறுத்தல் பரவியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் அச்சுறுத்தலை முறியடிப்பது இன்றைய தேசத்தின் முன்னுள்ள முதன்மையான பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார். |
Events
News
Government Service Centers

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற லக் ரெக்கிய ஹரசர தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திணைக்களத்தின் பிரதான இலக்கான மனிதவளத்தினை வினைத்திறன் வாய்ந்ததாக முதலிடும் வகையில் செயலாற்றிய 25 மாவட்டங்களிற்குமான தொழில் நிலையங்களிற்கான தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்ட தொழில் நிலையம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கவிருதினை வென்றுள்ளது.
சமுர்த்தி சிறுவர் கழக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான கௌரவிப்பு 17.12.2019 ( செவ்வாய்க் கிழமை ) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), பிரதம கணக்காளர், மாவட்ட செயலக சமுர்த்தி பணிப்பாளர், கிருபாகரன் ( கிருபா லேணர்ஸ்) , பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
|
|







ஒன்றுபட்டு எழுச்சி பெற்ற ஓராண்டு – ‘அகன்று செல்’ செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டு சர்வமத மாநாடு அலரி மாளிகையில் நடைபெற்றது! 




