போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் இன்றைய தினம் (21.06.2025) தெல்லிப்பளை காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு மற்றும் பருத்தித்துறை மூன்றாம் வீதியின் புனரமைப்பு வேலைகளுடன் ஆரம்பமாகியது.
அந்த வகையில் காங்கேசன்துறை கல்லூரி வீதியின் புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு ஜீவநாதன் அவர்கள், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் திரு. குரூஸ் அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
திரு. ம.பிரதீபன் அவர்கள் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
1   2
யாழ். மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமானது கழகத்தின் தலைவரும் உதவி மாவட்டச் செயலாளருமான செல்வி உ.தா்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.06.2025) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் அரசாங்க அதிபரும் கழகத்தின் போசகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பங்குபற்றி நலன்புரிக் கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தார்.
இப் பொதுக் கூட்டத்தில் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு அங்கத்தவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபையானது தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபையின் விபரங்கள் :
தலைவர் : திரு. ம. வித்தியானந்தநேசன் (பிரதிப் பணிப்பாளர், புள்ளிவிபரத் திணைக்களம்)
உப தலைவர் : திரு. நி. பிரபாகரன் (மேலதிக மாவட்டப் பதிவாளர்)
செயலாளர் :திருமதி கி. தயாபரி ( மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்)
உப செயலாளர் : திரு. க. சுபாகரன்
பொருளாளர் : திரு. உ. சுமன்
உப பொருளாளர் : திருமதி ஜெ. சிவகெளரி
விளையாட்டுச் செயலாளர் : திரு. எம். நிமலன்
நலன்புரிச் செயலாளர் : திருமதி வி. சுகுணாளினி
நிர்வாக சபை உறுப்பினர்கள் :
1.திரு நா. குகதாசன்
2.திருமதி எஸ். நிர்மலா
3.திருமதி க. குணதர்சனா
4.திரு பே. குகணேசர்
5.திரு. அ. தர்மேஸ்வரன்
6.திரு அ. நிறோஸ்
 
1 2 3 4 5 6 7 8 10 11
 
கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (19.06.2025) காலை 09.00 மணிக்கு அந் நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீலானி திசேர, யாழ்ப்பாணத்தின் பணிப்பாளர் அருட்தந்தை அன்றோ டெனிசியஸ் மற்றும் குழுவினர் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களும் உடனிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் கரித்தாஸ் - கீயூடெக் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தி வரும் செற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாக விவசாயம் சார்ந்த செயற்றிட்டங்கள் வீட்டுத் தோட்டம், பாடசாலை தோட்டம் போன்றவற்றிக்கு வழங்கிவரும் பங்களிப்புகள் தொடர்பாக நிறுவனத்தின் தேசிய திட்டமிடல் பணிப்பாளரால் எடுத்துக்கூறப்பட்டது.
 
 
1 2 3 4 5
இரண்டாவது காலாண்டுக்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.06.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், முதலாம் காலாண்டுக்கான நிதி முன்னேற்றத்தினையும், இரண்டாவது காலாண்டுக்குரிய நிதி விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்வதுமே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மேலும், நிதி முகாமைத்துவம், கட்டுப்பாடுகள் உரியவகையில் பின்பற்றப்பட வேண்டும் என்பதனையும் ஆராய்வது அவசியமானது எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான கடமைகள் மூலம் வேலைத் திட்டங்களுக்கான நிதி முன்னேற்றங்களை முழுமையாக இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், பழைய பூங்காவில் சுற்றாடல் தினமான யூன் 05 இல் முதற்கட்டமாக 200 மரங்கள் நாட்டப்பட்டதனை குறிப்பிட்டு, ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் ஒவ்வொரு மரத்தினை பொறுப்பேற்று சீராக நீர் ஊற்றிவருவதனையும், சில உத்தியோகத்தர்கள் தமது பிள்ளைகளுடன் விடுமுறை நாட்களில் வந்து நீர் ஊற்றிச் செல்வதனையும் அவதானித்த போது அவர்களின் சமூகப் பொறுப்பினை உணரக்கூடியதாக இருப்பதாகவும், இதன் மூலம் தமது கடமைகளிலும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயற்படக்கூடியவர்கள் என்பது புலனாகுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கணக்காளர் திரு. நிர்மல், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6