நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2025.06.26 ஆம் திகதி தொடக்கம் 2025.07.11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்து எனத் தீர்மானிக்கப்பட்டது.
1.நயினாதீவில் மூழ்கிய கடற்பாதையினால் ஏற்பட்டுள்ள கடற் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறை தவிர்ப்பதற்காக ஒரு பகுதியை கடற்படையின் ஒத்துழைப்புடன் அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2.குடிநீர் தேவைப்பாடுகள் - ஆலயத்திற்குவரும் பக்தர்கள், அமுதசுரபி மண்டபம் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கான தேவையான அளவு குடிநீர்களை சீராக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சீராக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் - அதாவது சப்பறத் திருவிழா வரை 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
4.பக்த்தர்கள் அணிந்துவரும் நகைகளுக்கு அவர்களே பொறுப்பு என அறக்காவலர் சபையால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
5.ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை யின் வீதியினை நிரந்திமாக புனரமைப்பதற்கு முன்பாக தற்காலிகமாக சீர் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
6.சாரணர்களின் சேவைகளைபெற்றுக்கொள்ளவது தொடர்பாகவும் முதல் தடவையாக தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்துச் சபையூடாக மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
7.திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் விசேட திருவிழாவான சப்பறம், தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களில் காலை 4.30 மணியிலிருந்து ஆரம்பமாகும் எனவும் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கும் சேவை இடம் பெறவும் ஒழுங்கு செய்யப்பட்டது.
8.குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
9.திருவிழா காலங்களில் நயினாதீவு கிராமங்களில்திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடமாடும் சேவையினை ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் அங்கு கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
11.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
12.ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேறு பொருத்தமான இடத்தில் மாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
13.நயினாதீவுக்கு 24.06.2025 ஆம் திகதி முதல் 12.07.2025 ஆம் திகதி வரை கட்டடப்பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது முற்றாக தடைசெய்வது எனவும், தொடர்ந்து எதிர்காலத்தில் கட்டடப் பொருட்களை நயினாதீவு வங்களாவடி துறைமுகத்தின் ஊடாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள ம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைய, படகுச் சங்கம், ஆலய அறக்காவலர் சபையினர் மற்றும் பொது அமைப்புகள் ஆய்வு செய்து இறுதி தீர்மானம் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
14.நயினாதீவில் மதுபான விற்பனையினை மதுவரித்திணைக்களம் நடமாடும் சேவையூடாக கண்காணிப்பது எனவும், விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
15.பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
16.அமுதசுரபி அன்னதான சபையினால் மதிய உணவு இரவு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
17.மேலும், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் திரு. சிவகரன், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
1 2 3 
 4 5 6 
7 
 
உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையி லான உளசமூக மன்றகலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னரான பாரிய தேவைப்பாடு ஏற்பட்டது எனவும், அதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பு காத்திரமானது எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது உள ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடுகள் அதிகம் உணரப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, கூட்டுப் பொறுப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இக் கலந்துரையாடலில் நோக்கமானது உளவளத்துணை மற்றும் உளசமூகப் பணிகளை இணைந்த வகையில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதுடன், இவ் வேலைகளில் காணப்படும் இடைவெளிகளை இனங்கண்டு உளநலத் தேவைகளை நிவர்த்தி செய்யவதற்கான கலந்துரையாடலாக அமைவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, யாழ்ப்பாண பல்கலைக்கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. க.கஜவிந்தன், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு. பரா.நந்தகுமார், உள மருத்தவ வைத்திய அதிகாரி திருமதி அ. வினோதா, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு ந.உதயகுமார் , அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 
 
4 5 6
மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய கலாசார போட்டி (சித்துரூ) 2025 இன் - மாகாண மட்டப் போட்டி இன்றைய தினம் (17.06.2025) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் அப் போட்டியில் பங்குபெறும் 14 வீர வீராங்களை இன்று காலை 6.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
இதன் போது மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு தி. உமாசங்கர், பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்களான திருமதி ஆர். தர்மினி திருமதி பா. சிவதர்சினி மற்றும் திருமதி எஸ்.சுமதி உடனிருந்தார்கள்.
 
1 2 3 
 
4 5
வெளிநாட்டில் தொழில் புரியும் ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய வர்கள் புதிய தொழிலை தொடங்குவதற்கான / தொழிலை விருத்தி செய்வதற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.06.2025) காலை 9.00 மணிக்கு மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சிப்பட்டறை ஆரம்ப நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட் இணைப்பாளர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்
( யாழ்ப்பாணம்) தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 
 4 5
பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 16 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம் தலைவர் திரு அப்புத்துரை அருந்தவநேசன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (14.06.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட பகிரங்க சேவைகள் ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் திரு. சி. சந்திரராஜா அவர்களும், கெளரவ விருந்தினராக ஓய்வூதிய அலுவலர் திரு ஜே. பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக மூத்த ஓய்வூதியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
 
 
1 2 3 4 5 6 7 8 9