சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி 2025.03.26 ஆம் திகதி அன்று ஓய்வு பெற்ற திரு. எஸ், ஆர். சர்வேந்திரன் அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இவ் கெளரவிப்பு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமது உரையில், ஓய்வு பெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சர்வேந்திரன் அவர்கள் தன் கடமைகளை பொறுமையுடன் சிறப்பாக கையாண்ட உத்தியோகத்தர் எனவும், உத்தியோகத்தர்களுடன் பண்பாக பழகியவர் எனவும், மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய பின்னர் நெடுந்தீவு, வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியவர் எனவும், குறிப்பாக தீவகப் பகுதியான நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேசங்களில் கடமையாற்றியமையானது சிறப்பான சேவை எனவும் குறிப்பிட்டார். மேலும் யுத்த காலங்களில் தன் கடமைகளிலிருந்து தவறாமல் பொறுப்புடன் சேவையாற்றிய உத்தியோகத்தர் எனவும் குறிப்பிட்டு புகழாரம் செய்தார். மேலும், அவரின் ஓய்வுக்காலம் குடும்பத்துடன் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இவ் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம கணக்காளர், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களால் வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். அதன் பின்னர் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களாலும் திரு. சர்வேந்திரன் தம்பதிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக ஓய்வு பெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். ஆர். சர்வேந்திரன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
ஓய்வு பெற்ற திரு. எஸ். ஆர் சர்வேந்திரன் அவர்கள் அரசாங்க சேவையில் 1994 ஆம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தராக மாவட்டச் செயலகம் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகத்திலும், பின்னர் 2009 ஆம் ஆண்டு பதவியுயர்வு பெற்று உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நெடுந்தீவு, வேலணை மற்றும் மாவட்டச் செயலகத்திலும், இறுதியாக 2021 ஆம் ஆண்டிலிருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றி 26.03.2025 இல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், கணக்காளர், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 7 
 
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் களவிஜயம் செய்தார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்தார்கள். இதன் போது மாணவர்களை வரவேற்று உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள்,
அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார். மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிர்வாக் கட்டமைப்புகள், இலங்கை நிர்வாக சேவைகள் மற்றும் ஏனைய பதவிகளின் விபரங்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவுகள், சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் மீளக்குடியமர் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பட்டம் பெற்றவுடன் தனியே அரசாங்க வேலைகளை மட்டும் தங்கியிருக்காமல் தனியார் துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்து வாழ்த்தினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களை அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
 
 
1 3 4 5 6 7 8 9 10 11 12
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.04.2025) பி. ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000.00 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2025.03.25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வீதிகள் தொடர்பான உப குழுக் கூட்டத்தினைஒழுங்குபடுத்துமாறு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, வீதி அபிவிருத்தி யுடன் தொடர்புடைய திணைக்களங்களையும் உள்ளடக்கிய இவ் உப குழுவில் பிரதேச செயலக ரீதியாக முன்னுரிமை அடிப்படையில் வீதிகளை தெரிவு செய்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு 09 செயற்றிட்டங்களுக்கு 131.02 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது எனவும் இதனை நீடித்து நிலைக்கும் வகையில் தொடர்புடைய பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் ஏனைய பங்குதார்களுடன் இணைந்து மிகவும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56.00 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை சென்ற ஆண்டு போல் குறிப்பிடப்பட்ட காலத்தில் நிறைவேற்றி முடிக்க அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீட்டுத் திட்டம், சமுர்த்தி வலுப்படுத்தல் வேலைத் திட்டம், நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை யின் வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களின்முன்னேற்றம் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
 
 
1 2 3 4 5 6 7 
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (05.04.2025) காலை 09.30 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், கடந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கடமைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினர்கள் சிறப்பாக கடமையாற்றியதாகவும் அதற்கான நன்றியினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, இம் முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் கடமைகளிலும் எம்முடன் இணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இச் செயலமர்வில் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் அஞ்சல் மூல அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அலுவலர்களின்
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவின் திட்டமிடல் பணிப்பாளர் திரு சந்தன டி சில்வா, பிரதி ஆணையாளார் திரு. கே. ஜே. எஸ். மகாதேவ மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படையினர்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
வடபகுதி உற்பத்தியாளர்களின் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குதற்கான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (04.04.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் ஊடாக அபிவிருத்தியினை மேம்படுத்தலாம் எனவும், சம்மேளனத்தின் ஒத்துழைப்பினை பெற்று சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், இச் செயற்பாடு வடக்கு தெற்கிற்கான வியாபார வகையாக அமைந்திருந்தாலும் ஒரு வகையில் நல்லிணக்கச் செயற்பாடாகவும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு, இன்றைய நிகழ்வினை உள்ளூர் உற்பத்தியாளர்கள் நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனம் வட பகுதி உற்பத்தியாளர்களின் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையில் அவர்களது பொருட்கள் சேவைகளை விருத்தி செய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் உற்பத்தியாளர்களின் பொருட்களை ஏற்றுமதி சந்தைக்கு ஏற்ற தொடர்புகளை மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாகவும், இன்றைய தினம் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு கௌரவ ஆளுநர் செயலகம், வடமகாண பிரதம பிரதமர் செயலாளர் அலுவலகம், போன்றவற்றின் வழிகாட்டலும் அந்தத் துறை சார்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது.
இந் நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபை மாகாண பணிப்பாளர், இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரி, தலைவர் மற்றும் சம்மேளன அங்கத்தவர்கள், தொழிற்துறை மாகாண பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள், வடபகுதி சம்மேளனத் தலைவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12