மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகள் அமைச்சர் கெளரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தமது அமைச்சின் கீழ் கடமையாற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இன்றைய தினம் மாலை 06.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் உடனிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளை மக்களுக்கு மேன்மேலும் வினைத்திறனாக வழங்குதல் தொடர்பாக கெளரவ அமைச்சர்கள் உத்தியோகத்தர்களுக்குஅறிவுறுத்தல்கள் வழங்கி கலந்துரையாடியதுடன், உத்தியோகத்தர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்கள்.
 
 
1 2 3 4 5
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (09.03.2025) பி.ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கெளரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணாநாதன் இளங்குமரன் அவர்களும், கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா அவர்களும் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு வி. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீசன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் திரு ந. சுகிர்தராஜ் அவர்களும், பாலம் செயற்றிட்ட திட்ட இணைப்பாளர் திரு எஸ். கிரிகரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், எமது மாவட்டத்தில் உள்ள குடும்பங்களில் 22 வீதம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எனவும், மாவட்ட நிகழ்வில் பெண்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பெண்கள் மற்றும் சிறுவர் அலுவலகள் கெளரவ அமைச்சர் பங்குபற்றுவது எமது பெண்களின்வளர்ச்சியில் மேலும் வினைத்திறனாக அமையும் எனவும், இவ் மகளிர் தினமானது ஒரு நிகழ்வாக மட்டுமில்லாது பெண்களின் எதிர்கால வளர்ச்சியின் இலக்காக அமையும் எனவும் அதற்காக இந் நிகழ்வில் பங்குபற்றிய கெளரவ அமைச்சர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், ஒரு சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும், எமது மாவட்டமானது யுத்தத்தின் பின்னராக வளர்ச்சி நோக்கியதாக அமைந்துள்ளது எனவும், இதற்கு பெண்களின் பங்கு காத்திரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றுகையில், நவீன உலகிலும் பெண்களுக்கான அவலக்குரல் உள்ளது எனவும், அதனைத் தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், எமது நாட்டிற்கான அன்னியச் செலாவணியினை ஈட்டித் தருவதில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவுள்ளதாகவும், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலைத் தெங்கு மற்றும் றபர் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கெளரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில், தாம் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துகொள்ளும் முதலாவது நிகழ்வு எனவும், தமது அரசாங்கமானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் நலன் தொடர்பில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும், தமது அரசாங்கமானது வடமாகாண அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டம் மூலம் கூடியளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பெண்களின் உரிமை, சமத்துவம், வலுவூட்டுதல் என்பன பேணப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில் பெண்கள் தீர்மானங்கள் எடுக்கும் நிலைக்கு வருதல் வேண்டும் எனவும், அந்த வகையில் பெண்களின் பங்களிப்பு விரிவாக்கப்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்புரைகள், நடனம் மற்றும் நாடகம் என்பன நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 3 4 5 6 789  10 11 12 13 14 15 16 17
மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திரு.ஆர்.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) பிற்பகல் 4.00மணிக்கு மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகைய இரண்டு எஞ்சின்களை கொண்ட மோட்டார் சைக்கிளை வடிவமைப்பு செய்து மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமைத்தமை சிறப்பான விடயம் எனவும் அதிகளவில் மாற்றுவலுவுள்ள பெண்கள் இவ் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுகொள்ள வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் இத்தகைய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டு அதற்கென தனித்துவமாக இலக்கத்தகடுகள் உருவாக்கப்பட்டிருப்பது எமது மாவட்டத்தின் தொழில்நுட்ப அறிவினை பறைசாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பன ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன.அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினை இன்றையதினம் அரசாங்க அதிபர் அவர்கள் வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைதடி மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது மாற்றுவலுவுள்ளோரினால், மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளை திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவினரால் பரிசீலிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்குரிய அடிச்சட்ட இலக்கங்கள் பொறிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த வாகனங்களிற்கு 325-6000 என்ற தொடர் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலமும் அவர்களுக்கு வாகனத்தை செலுத்துவதற்கான அங்கீகாரம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதன்முதலாக நடைபெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,உதவி மாவட்ட செயலாளர் ,பிரதம கணக்காளர் ,மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் ,சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ,சிறுவர் நன்னடத்தை மாகாண பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மாற்றுவலுவுள்ளோர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை (08.03.2025) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்நிகழ்வானது தொழில் தேடுநர்கள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் என தெரிவித்ததுடன், இந் நிகழ்வில் 45 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள், ஆடை உற்பத்தித் துறை, பாதுகாப்புச் சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறை போன்ற தொழில் வெற்றிடங்களிற்கான ஆட்சேர்ப்பதற்கான நிறுவனங்கள் மற்றும் கணினித்துறை, தாதியர் பயிற்சி நெறி, கப்பல் துறை ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற பாட நெறிகளை நடாத்தும் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் வங்கிக் கடன் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் போன்றவை உள்ளடக்கிய வகையில் தொழிற் சந்தை நடைபெற்றது.
இன்றைய தொழிற் சந்தையில் 400 இற்கு மேற்பட்ட தொழில் நாடுவோர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் , வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், தொழில் தருநர்கள், மற்றும் தொழில் தேடுவோரும் பங்குபற்றியிருந்தனர். 
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பு அவசியமானது என குறிப்பிட்டதுடன், பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கடந்த கூட்ட விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன்,
இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்கள் 9000 பேர்வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து செல்லுகின்ற பயணிகளுடைய பதிவுகள் குறிகாட்டுவானில் மேற்கொள்ளபடுமெனவும் ஏனைய பிரதேசங்களிலிருந்து செல்லுகின்றவர்கள் கடற்பாதுகாப்பு கருதி தங்களுடைய பிரதேசங்களில் உள்ள கடற்படை முகாம்களில் தங்களுக்குரிய பங்குகளிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1300.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இம்முறை சாரணர்கள் 25பேர்வரை இத்திருவிழாவில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுதுடன்,
கடற் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள படகுகள் சேவை மற்றும் அவை புறப்படும் நேரங்கள் தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டன
யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், ஆலயச்சூழல் துப்பரவு செய்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம், தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகள் (Dialog,mobital)ஊடகங்களுக்கான அனுமதி தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, மாவட்ட பிரதம கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதி , யாழ்ப்பாண சாரணர் பிரதிநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7