மாவட்ட மட்ட ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலமான தேசிய கலை இலக்கியப் போட்டியானது இன்றைய தினம் (12.10.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட போட்டியாளர்களாக பல மாணவர்களும் பங்குபற்றினார்கள்.

இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் (ESPD) மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (09.10.2024) காலை 09.00மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டத்தில் சென்ற வருடம் வழங்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளமையையும் இவ்வருடத்தில் இலக்கினை அடைவதற்கு மாவட்டத்தில் சமூக சேவைகள் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பின் அவசியத்தினையும் வலியுறுத்தினார். மேலும் JICA நிறுவனத்துடன் இணைந்து, 2022- 2025 வரையான காலப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களின் எண்ணிக்கை 50 என்ற இலக்கினை அடைவதற்கு பங்களிப்பு தெரிவித்ததுடன், இத் திட்டத்திற்குரிய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட ரீதியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை உரிய பிரதேச செயலகத்தில் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும்ஜப்பான்JICA நிறுவனத்திற்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஜப்பான்JICA திட்ட இணைப்பாளர் திரு. Shimizy Takachi, சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான
திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (08.10.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்கத்தின் பிரதி ஆணையாளார் திரு எஸ். அச்சுதன் அவர்களும் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் 2024.07.01ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவிஉயர்த்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.10.2024) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் மழைகாலம் வருவதனால் டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமன் பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மேலதிக அரசாங்கஅதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







