எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (09.09.2024) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
    1 2 3 4 5
மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான சேவை வழங்குனர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (06.09.2024) மு. ப. 11.00 மணிக்கு நடைபெற்றது.
தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்டச் செயலகத்திற்கும் சேவை வழங்குனர்களுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பின் மூலம் நிர்வாக நடைமுறைக்கமைய வினைத்திறமையான சேவையினைப் பெற்றுக்கொள்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட சேவை வழங்குனர்களால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக விரைவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காளர் (பெறுகை), சேவை வழங்குனர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது புதிய விமான சேவை இண்டிகா (Indiga) விமான சேவை நேற்றைய தினம் (01.09 2024 ) தனது சேவையினை ஆரம்பித்தது.
சென்னையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமான சேவை சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுடன் பி.ப 3.05 மணியளவில் பலாலியை வந்தடைந்தது. முதல் தடவையாக வருகை தரும் பயணிகளுக்கு தொழில்துறை நிறுவனத்தின் பங்களிப்புடன் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் மற்றும் சுற்றுலா ஊக்கப்படுத்தல் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இச்சேவை மூலம் கலந்து கொண்டு முதலில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நினைவுப் பொதிகள் வழங்கி வரவேற்றாா்.
இந்நிகழ்வில் யாழ் .இந்திய துணைத்தூதுவர், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர் மாவட்ட விமானப் படை அதிகாரிகள், தொழிற்துறைத் திணைக்கள அதிகாரிகள், வடமகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஹோட்டல் முகாமையாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோா் பங்கு பற்றியிருந்தனர்
 
2 3 1 4 5
மாவட்டச் செயலகத்தில் சிரேஷ்ட சாரதியாக அர்ப்பணிப்பான சேவையாற்றி 23 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திரு. நாகப்பர் குகதாசன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் தமது வாழ்த்துரையில், சாரதி கடமை என்பது மிகவும் கடினமான பணி. அப் பணியினை மிகவும் நேசித்து சிறப்பாகவும், துல்லியமாகவும் கடமையாற்றியவர் என்பதுடன் பண்புமிக்கவராக விளங்கியவர். தான் கடமையாற்றிய உயர் அதிகாரிகளுக்கு நம்பகத்தன்மை வாய்தவராக விளங்கியதுடன், சாரதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
அரசாங்க அதிபர் அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பாமாலை வழங்கி திரு. திருமதி குகதாசன் தம்பதிகள் கெளரவிக்கப்பட்டார்கள். திரு. நா. குகதாசன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (02.09.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம் வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர், பலாலி விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர் , தொழிற்துறைத் திணைக்களம் , வீதி அபிவிருத்தி திணைக்களம் சந்தைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5