யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2வது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (22.08.2024) மு. ப 9.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட
பதில் அரசாங்க அதிபர் அவர்கள் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெறும் சிறுவர் முறைப்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியதுடன், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர், பெண்கள் ,முதியோா் தொடர்பான உத்தியோகத்தர்கள் மேற்படி வகுதியினர் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடி ஒக்டோபர் 15ம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் தெரிவித்திருந்தார்.
மேலும் பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகம், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் , பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் முறைப்பாடுகள், பிரதேச மட்டத்தில் தீரக்கப்பட முடியாத பிரச்சினைகள் , பாடசாலை பஸ் சேவை போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் , பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (21.08.2024) காலை 10.00 மணிக்கும் பி.ப 02.30 மணிக்கும் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்தார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாக கிராமஅலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
உளவள ஆற்றுப்படுத்தல் தொடர்பான கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (16.08.2024) மு. ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் நலிவடைந்தவர்களை உள சமூக ஆதரவூடாக வலிப்படுத்துவதற்கான வைகறை வேலைத் திட்டம் தொடர்பாக FAIRMED Foundation இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து முதற்கட்டமாக மருதங்கேணியில் முள்ளியான் கிராமமும், தெல்லிப்பழை பிரதேச செயலகங்களிலிருந்து நல்லிணக்கபுரம் கிராமமும் தெரிவு செய்யப்பட்டு அக் கிராமத்திலுள்ள சிறுவர், இளைஞர்களுக்கு இவ் வைகறை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக உளவள ஆற்றுபடுத்தலை மேற்கொள்வதை நோக்காக கொண்டு இச் செயற்றிட்டம் நடைபெறவுள்ளது.
உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர்,மருதங்கேணி பிரதேச செயலாளர், தெல்லிப்பளை உதவி பிரதேச செயலாளர் FAIRMED Foundation யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள சமூக இணைப்பாளர், வலிகாமம், வடமராட்சி பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.08.2024) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யு. என். டி. பி. நிறுவனத்தினால் சங்கானை, தெல்லிப்பளை, கோப்பாய், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வாழ்வாதாரம், வீடமைப்புத் திட்டம் உள்ளடங்கலான திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர், கடற்றொழி்ல் உதவிப் பணிப்பாளர், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர், யு. என். டி. பி. திட்ட இணைப்பாளர் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5
உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று (16.08.2024) தொடக்கம் பக்த்தர்களுக்கு பிரதி வெள்ளிக்கிழமைதோறும் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண பதில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. சிறிமோகனன், துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், நகுலேஸ்வர ஆதீனகர்த்தா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள், பக்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3