பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து சேவை வழங்கும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்பணர்வுச் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (31.07.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் சிறுவர் துஸ்பிரயோகங்களை அடையாளம் காணுதல், சிறுவர்களுக்கான பாதுகாப்பான பயணம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், உதவி ஆணையாளர் மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை, மாவட்டச் செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6
மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் 2 ஆவது அரையாண்டுக்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (30.07.2024) பி. ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
 1 2 3
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.07.2024 ) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இத் திட்டங்களை விரைவாக பூர்த்தி செய்வதற்காக, திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 4 5 3
மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆவணி மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் நடைபெறவுள்ள உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி, விற்பனை தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக தொழில்முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (29.07.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தொழில்முயற்சியாளர்களுக்கான சுகாதாரம், போக்குவரத்து மற்றும் இதரவசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், யாழ் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர், தொழில் முயற்சியாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 6
வினைத்திறனான அரச சேவையினை வழங்குவதற்கான கருத்தூட்டல் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.07.2024 ) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் Transparency of International Sri Lanka நிறுவனத்தின் அனுசரணையுடன் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக நிறைவேற்று, பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது.
இச் செயலமர்விற்கு நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக ( Zoom) அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. தம்மிக்க முத்துக்கல அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் Ms. டிலாந்தி சிறிவர்த்தன, TISL அலுவர் Ms. சகுந்தலைஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இச் செயலமர்வில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3 64 5  7 9 10 11 12