வளிச்சீராக்கி பொறிவலர்களுக்கான தேசிய தொழில் தகைமை மட்டம் (NVQ) சான்றிதழ் வழங்கும் இலவச திட்டத்தினை செயல்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் (10.08.2024) காலை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் வளிச்சீராக்கி பொறிவலர்கள் கலந்து கொண்டார்கள்.

நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (10.08.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு மேலதிக ஆணையாளர் திரு. சிந்தக குலரட்ண, பொலிஸ் திணைக்கள பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. றுவான் குணசேகர, பொலிஸ் திணைக்கள தேர்தல்கள் பணிப்பாளர் திரு அசோக தர்மசேன, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. தர்மபால, யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ஜே. ஏ. ஹாலிங்க ஜெயசிங்க , உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இக் கலந்துரையாடல் சனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.

மூன்றாம் நிலை முறைசாராக் கல்வி, தொழில் சார் பயிற்சி முறைமை மூலம் மாணவர்களை முன்னேற்றுதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (08.08.2024) பி. ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பதில் அரசாங்க அதிபர் அவர்கள் ஒரு முன்னோடித் திட்டமாக ( Pilot Project) - திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக ஒரு கிராம சேவையாளர் பிரிவு அல்லது அதனுடன் இணைந்த கிராம சேவையாளர் பிரிவினையும் இணைத்து ஆகக் குறைந்தது 100 இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்கல்வியினை ஏற்படுத்தவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், இதன் முன்னேற்றங்கள் அடுத்த மாதம் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இவ் விழிப்புணர்வுச் செயற்பாட்டிற்கு தொழில் பயிற்சி அதிகார சபையின் (VTA) ஒத்துழைப்பினை நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், தொழில் பயிற்சி அதிகார சபையின் (VTA) பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) மாவட்ட முகாமையாளர், கல்வி வலய முறைசாராப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. J. A. ஹாலிங்க ஜெயசிங்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08.08.2024) பி. ப. 4.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (08.08.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம், கணக்காய்வாளர் அத்தியட்சகர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








