IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் யாழ் மாவட்ட செயலக உளவளத்துணை நிலைய திறப்பு விழா இன்று (26.08.2024) பி.ப 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் IOM நிறுவன திட்ட முகாமையாளர் ஆகியோரால் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மேம்பாடு தொடர்பான பயிற்சிப் பட்டறையானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் (22.08.2024) காலை 9.00 மணிக்கு யாழ் திண்ணை ஹொட்டலில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான ஒரு அங்கமாக டிஜிட்டல் முறையில் எவ்வாறு சந்தைப்படுத்தலாம் என்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
இப் பயிற்சிப் பட்டறையின் இறுதி நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், மாறிவரும் உலகில் இளைய சந்ததியினர் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து வருவதனால் இவ்வாறான பயிற்சி அத்தியாவசியமாகிறது எனவும், இதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறைக்கு இப் பயிற்சிப் பட்டறை உதவியாகவிருக்கும் என்றும், பயிற்சி பெற்றவர்கள் அக்கறையுடன் செயற்பட்டு சவால்களை எதிர்கொண்டு வளர்ச்சி நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாவட்டச் செயலக திறன் அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில், இந்த பயிற்சிப் பட்டறையானது தெரிவுசெய்யப்பட்ட 40 சிறுமுயற்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு Australian AID மற்றும் Skills for Inclusive Growth அமைப்பின் அனுசரணையில் பயிற்சி வழங்கப்பட்டது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (22.08.2024) நன்பகல் 1.00 மணிக்கு நடைபெற்றது.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

சனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குசீட்டுக்களை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (22.08.2024) மாலை 2.00 மணிக்கு நடைபெற்றது.
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் ,ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (22.08.2024) மு. ப 11.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.








