யாழ்ப்பாண மாவட்டத்தில் சனாதிபதித் தேர்தலானது நீதியாகவும், சுமூகமாகவும், நடைபெற ஒத்துழைப்பு நல்கிய வாக்களிப்பு, வாக்கெண்ணல், மேற்பார்வை ,குழுக்கடமைகளில் ஈடுபட்ட அனைத்துத் தரஉத்தியோகத்தர்கள், மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர், தீவக கடற்போக்குவரத்தில் ஈடுபட்ட கடற்படையினர், நெடுந்தீவிலிருந்து வாக்குப் பெட்டிகளை உலங்குவானூர்தி மூலம் கொண்டுவருவதற்கு உதவிய விமானப்படையினர், பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்ட பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் போக்குவரத்து சேவையினை வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்துச்சங்கம்,சாரதிகள், சிற்றூழியர்கள், உடனுக்குடன்தேர்தல் முடிவுகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சகல தரப்பினர்களுக்கும் அரசாங்க அதிபர் என்கின்ற ரீதியிலும், தெரிவத்தாட்சி அலுவலர் என்கின்ற ரீதியிலும் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்கள்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, சனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாத காரணத்தினால், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (10.9.2024) காலை 9.00மணிக்கு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், வவுனியா , கிளிநொச்சி மாவட்ட போதை தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.







