AI (Arificial Intelligence) தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட உஅரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (17.03.2025) காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தற்போதைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் மிக முக்கியமானதாக மாறிவிட்டதாகவும், சர்வதேச ரீதியாக புகழ் பெற்றுள்ள துறையாக இந்த AI தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது எனவும், இது தொடர்பில் ஓரளவு தெளிவு இருந்தாலும் இந்த தொழில்நுட்பம் தொடர்பாக மேலதிக தெளிவுகளை முழுமையாக பெற்றுக்கொள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களை வினைத்திறனாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் உத்தியோகத்தர்களுக்கு AI தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் மற்றும் அரச அலுவலகங்களில் அதன் தேவைப்பாடு மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் றுகுணு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.நளின் விஜயசிங்க, சிரேஸ்ட விரிவுரையாளரும் ருகுணு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க நிலைய பணிப்பாளருமான கலாநிதி சுரேன்ஜித் குணசேகர, மாவட்ட, பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம் (14.03.2025) கொடியேற்றத்துடன் இடம்பெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
வருடாந்த திருநாள் திருப்பலி நிகழ்வு இன்றைய தினம் (15.03.2025) காலை 06.15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. வணக்கத்துக்குரிய தமிழ்நாடு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் மற்றும் யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், அடிகளார் தலைமையில் இலங்கை இந்திய பங்குத் தந்தையர்களின் கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து காலை 09.30 மணியளவில் புனிதரின் திருச் சொருப ஆசிர்வாதம் இடம்பெற்றது.
இன்றைய திருவிழாவில் நெடுந்தீவு பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய பி. பத்திநாதர், கொழும்பு பிரதேச பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய சிஸ்வான் டீ குரூஸ் உள்ளிட்ட இலங்கை இந்திய அருட்தந்தைகள் ஏராளமானோர் பங்குபற்றினார்கள்.
இத் திருவிழாவில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்களும், இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி அவர்களும் தூதரக அதிகாரி திரு இ. நாகராஜன் அவர்கள், அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இலங்கை கடற்படைத் தளபதி, வட மாகாண கடற்படை கட்டளை தளபதி உள்ளிட்ட கடற்படை உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்தியாவினைச் சேர்ந்த 8500 ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வழங்கல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (14.03.2025) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு பிறப்பு சான்றிதழ் பெற முடியாதுள்ளவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும், நலன்புரி நன்மைகள் திட்டத்திற்கு கட்டாயம் தேசிய அடையாள அட்டை தேவையாகவுள்ளதாகவும் அதற்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம் எனவும் குறிப்பிட்டதுடன்,இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற மாவட்ட பிரதிப் பதிவாளர், பிரதேச செயலகங்களை சேர்ந்த பதிவாளர்கள், உதவிப் பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த நடமாடும் சேவையினை 18.06.2025 ஆம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பினருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இன்றைய நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 30 சிறுவர்களுக்கும் உத்தேச வயதுப்பத்திரம் 05 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 07 பேருக்கும், இறப்பு பதிவு 04 பேருக்குமாக 46 பயனாளிகள் பயனடைந்தார்கள்.
இந் நிகழ்வில், வடக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.பி.பிரபாகர், மாவட்ட உதவிப்பதிவாளர் நாயகம் பி.தாரகா ,மாவட்ட மற்றும் பிரதேச செயலக மேலதிக பதிவாளர்கள் ,பிரதேச சிறுவர் மேம்பாடு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதால் அது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 14.03.2025 அன்று பி. ப 4.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .