வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும் மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளராக, பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டநியமனக் கடிதத்தினைதிரு. குணசிங்கம் துசாந்தன் அவர்களுக்கு இன்றைய தினம் (24.02.2025) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பிரதிப்பதிவாளர் நாயகம், உதவிப் பதிவாளர் நாயகம் மற்றும் காணி மாவட்ட பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 
'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23.02.2025) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரை அந்தந்த பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றது.
அந்தவகையில் மாவட்ட நிகழ்வானது பருத்தித்துறை பிரதேதச செயலக பிரிவில் உள்ள சக்கோட்டை கடற்கரைப்பகுதியின் 2 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரகளாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாணப் கடற்படைகளின் பிரதித் தளபதி, பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரும் கெளரவ விருந்தினராக Save a life நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டார்கள். மேலும் இந் மாவட்ட நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக பருத்தித்துறை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கடற்கரையினைத் துப்பரவு செய்தார்கள்.
மேலும் இந் நிகழ்வின் சமநேரத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 50 கி.மீ கடற்கரையானது அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் சுத்தம் செய்யப்படுள்ளது.
 
1 2 3 4 5 6 7 8 9 10
மாவட்டச் செயலகத்தின் உற்பத்தித் திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக கோண்டாவில் இராமகிருஷ்ணா மகாவித்தியாலய பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்றைய தினம் (21.02.2025) மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்தார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்தித்தார்கள். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், உற்பத்திக் திறன் செயற்பாட்டு நடைமுறையானது வினைத்திறனான செயற்பாட்டிற்கான ஆரம்ப புள்ளி எனவும், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் உற்பத்தித் திறன் செயற்பாட்டில் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் மாவட்டச் செயலகம் ஏற்கனவே தேசிய ரீதியாக முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், பாடசாலை ரீதியான உற்பத்தித் திறன் செயற்பாடுகளின் அவசியத்தினை மாணவர்களுக்குஎடுத்துக் கூறினார்.
இச் சந்திப்பில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, உற்பத்தித் திறன் மாவட்ட இணைப்பாளர் திருமதி. உ. சி. அனுஷியா மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7

வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (20.02.2025) பி.ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், மாவட்டத்தில் புனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை துல்லியமான முறையில் தயாரித்து உரிய அமைச்சிற்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், அதற்காக பிரதேச செயலக ரீதியாக புனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை வீதிகளுக்குரிய வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து சரியான முறையில் தயாரித்து மாவட்டத்தின் மொத்த தேவைப்பாடுகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக புனரமைப்பு செய்ய வேண்டிய வீதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4