தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயகத்தினால் வலுவற்ற மக்களின் சமூகத் தேவைப்பாடுகளை அடையாளம் காணுவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், தாய் தந்தையினை இழந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் மற்றும் தேவை மதிப்பீடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் உரிய தகவல்களுக்கு அமைய, உரிய திணைக்களங்கள் மற்றும் சகவாழ்வுச் சங்கங்கள் ஊடாக செயற்றிடங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சன்துனி ஆரியவன்ச, உதவிப்பணிப்பாளர் திரு.சுசந்த குமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடின் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் தொழில் முயற்சியாளர்கள் இடர்பாடுகளை கலந்துரையாடி தீர்க்கவும், ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்வதுமே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும், முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து ஒழுங்குபடுத்துவதே அரச பணியாளர்களின் நோக்கமாகவிருக்க வேண்டும் எனவும், ஒர் கூரையின் கீழ் தீர்க்கவல்ல வகையில் அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கான கருத்துக்களையும் முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டனததுடன், இக் கலந்துரையாடலில் பங்குபற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் தலைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு, முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கும் வகையில் தொடர்புடைய திணைக்களங்களையும் அழைத்து சீரான கால இடைவெளிகளில் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள், "க்ளீன் ஶ்ரீலங்கா" செயற்றிட்டமானது தனித்தே சூழலை மாத்திரம் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல எனவும், மனங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், முதலீட்டாளர்களுக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் எவ்வாறு என்ன அடிப்படையில் உதவிகள் வழங்கலாம் என்று முயற்சி செய்து முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சன்துனி ஆரியவன்ச, உதவிப்பணிப்பாளர் திரு.சுசந்த குமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், வர்த்தக முகாமைத்துவ குழுவின் தலைவர், வர்த்தக கைத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முதலீட்டாளர்கள் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.02.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், வினைத்திறனாக செயற்படுவதன் ஊடாக
நிதி முகாமைத்துவதுவத்தினை உத்தம மட்டத்தில் பேணமுடியும் என்றும் அடுத்த மட்ட ஏனைய உத்தியோகத்தர்களை நெறிப்படுதுவதன் ஊடாக வெற்றிகரமாக திட்டத்தினை பூர்த்தி செய்ய முடியும் எனவும்,
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்பு வினைத்திறனான சேவையை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக அமையும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் திரு. சுனில் ஜெயசேகர அவர்கள் நிகழ்நிலை தொழில்நுட்பம் (Zoom) ஊடாகவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி பொன்ராணி அவர்கள் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கணக்காய்வு அத்தியட்சகர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், , திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் (TOT) நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.02.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க, மேலதிக தேர்தல் ஆணையாளர் (நீதி) சட்டத்தரணி திரு. சிந்தக குலரத்ன, மேலதிக தேர்தல் ஆணையாளர் (நிர்வாகம்) திரு.எஸ்.அச்சுதன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக திரு. செ. கிருபாகரன் அவர்கள் இன்றைய தினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.






