யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்கள் மற்றும் வரைவை ஒழுங்காக கடைப்பிடிக்கும் கிளைகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் இன்றைய தினம் (22.01.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஆனி மாதம் தொடக்கம் கார்த்திகை மாதம் மாதம் வரையிலான காலப்பகுதியில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்களுக்கே சான்றிதழ்கள் வங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்படி காலப்பகுதியில் காலை 08.30 மணிக்கு முன்னர் 100% உத்தியோகத்தர்களின் வரவை ஒழுங்காக கடைப்பிடித்த கிளைகளின் தலைவர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
1 2 3 
 
4 5 6
 
7 8 9
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி வீர வீராங்கனைகளுக்கான நிகழ்வானது யாழ்ப்பாண வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.01.2025) மு. ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஒரு போட்டியில் வெற்றி தோல்வியினைக்காட்டிலும், அப் போட்டிகளில் பங்குபற்றுவதே பாராட்டத்தக்கவிடயம் எனவும், அதிலும் குடும்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் குறிப்பாக பெண் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்டார். மேலும், போட்டித்தன்மை இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாது எனவும், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவதன் ஊடாக நல்ல மனப்பாங்கு உருவாவதற்கும், நேரமுகாமைத்துவம் பேணுவதற்கும் மற்றும் அர்ப்பணிப்பாக செயற்படுவதற்கும் துணை நிற்கும் எனவும் குறிப்பிட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தினை பெருமைப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது 23.11.2024 அன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் 40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கான போட்டிச் சான்றிதழ்களும் , அரசாங்க அதிபரின் மெச்சுரையும் வழங்கப்பட்டதுடன், அணிகளுக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது. மேலும், கலப்பு போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளுக்கும் அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கப்பட்டது.
மேலும், இப் போட்டிகளுக்கு முன்னின்று உழைத்த வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதனை முன்னிட்டும் அரசாங்க அதிபர் அவர்களால் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், வடக்கு வலய பதிவாளர் நாயகம், மேலதிக மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4
 
5 6 7
 
8
 
 
"க்ளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, திணைக்களத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (2025.01.17) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 02.30 மணிக்கு நடைபெற்றது.
இச் விழிப்புணர்வு நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் நிகழ்நிலை (Zoom) மூலம் கலந்து கொண்டு "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் நோக்கத்தினை விளக்கமளித்தார்.
இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய திணைக்களத்தின் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1  2  3  
 
4  5
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தைப்பொங்கல் பண்டிகையானது புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கெளரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (18.01.2025) காலை 07.30 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் சமய வழிபாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை ஆன்மீக மற்றும் கலாசார விழிப்புணர்வு நடைபயணம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் மதத்தலைவர்கள், இந்திய தூதுவர் கெளரவ ஸ்ரீ சந்தோஷ் ஜா, கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சறோஜா சாவித்திரி போல் ராஜ், வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ திரு.பிரதீப் சுந்தரலிங்கம், புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கெளரவ கமஹேதர திசாநாயக்க, தொழில் பிரதி அமைச்சர் கௌரவ மஹிந்த ஜெயசிங்க, இந்திய துணைத் தூதுவர் கெளரவ ஸ்ரீ சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கலாநிதி நஜித் இந்திக்க, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், வட மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னாா் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த மூத்த கலைஞர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலபேர் கலந்து சிறப்பித்தனர்.
 
 
1  2  3  
 
4
நாளை (18.01.2025) தெல்லிப்பளையில் நடைபெறவுள்ள தேசியப் பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் கௌரவ திரு.பிரதீப் சுந்தரலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நஜித் இந்திக்க, மூத்த கலைஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கொழும்பிலிருந்து இன்று (17.01.2024) மு. ப 11.45 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையம் வந்தடைந்தனர். அவர்களை மாவட்டச் செயலகத்தின் சார்பில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையிலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் வரவேற்றார்கள்.
மேலும் இந் வரவேற்பு நிகழ்வில் வணக்கத்திற்குரிய ஹொரகல விமலதிஸ்ஸ தேரர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. விநாயகமூர்த்தி சகாதேவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கெளரவ பிரதி அமைச்சர் அவர்களுடன் தேசிய நூலகத்தின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, இலங்கை கலை மன்றத்தின் தலைவர் திரு. கீர்த்தி வெலிசரகே மூத்த கலைஞர் திரு.தர்மசிறி பண்டாரநாயக்க, மூத்த இலக்கியவாதி திரு ஜயதிலக கம்மல்லவீர,
மூத்த நடிகர் திரு. சந்திரசோம பிந்துஹேவா,
மூத்த இலக்கியவாதி திரு.
கமல் பெரேரா, மூத்த நாடக இயக்குனர் திரு.சுனில் கோஸ்டா, சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.பிரசன்னஜித் அபேசூரிய, மூத்த நடிகைகள் திருமதி சமிலா பெரிஸ், மூத்த கலைஞர் திரு.எஸ்.சுதாராஜ் , மூத்த வர்ண கலைஞர் திரு. பிரகீத் ரத்நாயக்க, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும்
அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. பிரேமரத்ன தென்னகோன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
 
 
1  2  3  4  5  
 
6  7