தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் 2024.12.11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்புச் செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத் தீர்மானமானது மாவட்டத்தின் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகவும். பிள்ளைகளின் நலன்கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் அமைவிடங்கள், வகுப்பறைக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொடர்பிலும் நிறுவன உரிமையாளர்கள் கூடுதலான கவனம் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
மேற்படி கலந்துரையாலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களைவெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது எனவும். பிரதேச செயலாளர்கள் தமது உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்படி விடயத்தினை கண்காணித்து அறிக்கையிடுதல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2.தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் / நிர்வாகிகள் இதற்கான சரியான பொறிமுறையினை மேற்கொண்டு போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இந்த பொறிமுறையினை தாமாக நடைமுறைப்படுத்த தவறும் தனியார் கல்வி நிறுவனங்கள்; தொடர்பில் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.பிரதேச செயலாளர்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தமது பிரதேசங்களில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களை தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ் மாவட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13.12.2024) பி.ப 03.00 மணிக்கு இலங்கை சமுத்திர பல்கலைக்கழக யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. கோ. அருள்சிவம் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் தமதுரையில், இப் பயிற்சி நெறியானது மாணவர்களுக்கான வரப்பிரசாதம் எனவும், குறிப்பாக கடலக மாலுமிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாகவும், தீவுப்பகுதிகளுக்கான தரச் சான்றிதழ் பெற்ற கடலக மாலுமிகள் இல்லை எனவும், இது சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பினை வழங்கும் எனவும் குறிப்பிட்டதுடன், கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடலட்டை வளர்ப்பு ஆகிய கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சிறந்த தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும், ஒரு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் பெறுவது என்பது இலகுவான விடயமில்லை எனவும், மாணவர்களை கெளரவப்படுத்த வேலைப் பளுவுக்கும் மத்தியிலும், கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களைப் பாராட்டி நன்றிகூறியதுடன், எமது மாணவர்களுக்கான - கடலக மாலுமி களுக்கான தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் மட்டம் 04 இனை மட்டம் 05 ற்கு உயர்த்துவதற்கான கற்கை நெறியினை நடாத்த வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார். இதன் போது அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் கற்கை நெறியின் மட்டம் 05 இனை நடாத்த நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்த இரட்நாயக்க அவர்கள் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஶ்ரீமோகனன் அவர்களும், இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் பயிற்சிக்கான பணிப்பாளர் திரு. சந்தன குமார அவர்களும், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடித் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கே. சிவசாந்தினி அவர்களும் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ.தர்சினி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தினால் கடலக மாலுமி கற்கைநெறிக்கு தேசிய தொழிற் தகைமைக்கான சான்றிதழ் மட்டம் - 04 இற்கு நடாத்தப்பட்ட மதிப்பீட்டு பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும் மற்றும் கடற்பாசி வளர்ப்பு மற்றும் கடலட்டை வளர்ப்பு ஆகிய கற்கைநெறிகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், IOM நிறுவன இணைப்பாளர், சமுத்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டார்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13.12.2024) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன்அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணாநாதன் இளங்குமரன், வைத்திய கலாநிதி கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் பங்குபற்றினார்கள்.
மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய தினம் (13.12.2024) காலை 09.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தனது வரவேற்புரையில் கெளரவ அமைச்சர், கெளரவ ஆளுநர் மற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ் ஆண்டு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக 1303.42 மில்லியன் ரூபா இற்றைவரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், பல இன்னல்களை சந்தித்த யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் அவசியம் எனவும், எமது அரசாங்கமானது இலங்கை மக்கள் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு செயலாற்றும் என்றும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் முன்னேற்றத்திற்கு ஒன்றிணைந்து வினைத்திறனாக செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், எமது அரசாங்கமானது கிராமங்களை நோக்கிய பாச்சலுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், வட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடிய நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு மேற்கொள்ளவுள்ளதாகவும்தெரிவித்து, அனைவரும் கட்சிபேதங்களின்றி மாவட்ட அபிவிருத்திக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரையில் 302.82 மில்லியன் ரூபாவும், பிராந்திய அபிவிருத்தி திட்டத்தில் 87.09 மில்லியன் ரூபாவும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் 538.95 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் குறிப்பிடப்பட்டது. மேலும், மீள்குடியேற்றம், சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ,கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கெளரவ சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட கட்டளை தளபதி மற்றும் கடற்படைத் தளபதியின் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 4 ஆவது காலாண்டுக்குரிய குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.12.2024) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் உரிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டன.
2.மாணவர்களின் பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த அரசாங்க அதிபர் அவர்கள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
3.முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் 09 கீழ்ப்பட்ட வகுப்புகளை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்திலும் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுமையாகவும் மாணவர்களின் இணை பாடவிதானச் செயற்பாடுகளுக்காக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பில் பிரதேச செயலாளர்களை உரிய கல்வி நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் மற்றும் மாவட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற 21 சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் , சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






