இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 2024.12.10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிப 4.00 மணிவரை நடைபெறவுள்ளதாக யாழ்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், இதுவரை பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் நிஷாந்த முத்துமால அவர்கள், இன்றைய தினம் (07.12.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.12.2024) பி.ப 2. 30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வெள்ள அனர்த்தத்தின் போது சிறப்பாக கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தாம் பல பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதாகவும், உடனடியாக தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு நடவடிக்கை எடுத்ததாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் பார்வையிட்டதாகவும், சில கிராமங்களில் வெள்ளத்தினை வெளியேற்றுவதற்கான பொறிமுறையினை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் பல நிரந்தர திட்டங்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயற்படுவோம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், பிரதேச செயலாளர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.


1) தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க முடியும்.
ii) முதலாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் வீடுகளிற்கு அலுவலர்கள் வருகை தந்து அவர்களால் தரவுகள் சேகரிக்கப்படாத நபர்கள் மற்றும் தகவல் சேகரிக்கப்பட்டும், நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் தகவல்கள் பதிவேற்றப்படாத நபர்கள்.
2) முதலாம் கட்டத்தில் அல்லது இரண்டாம் கட்டத்தில் ஆரம்ப விண்ணப்பம் கோரலின் போது நபர் ஓருவர் தாம் வசித்த கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து மாற்றலாகி தற்போது வேறு கிராம அலுவலர்; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தற்போது வசிக்கும் தனது புதிய கிராம அலுவலர்;; பிரிவு அல்லது பிரதேச செயலாளர் பிரிவில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
3) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்தில் எண்ணீட்டு பணியானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இடம்பெறும் என நலன்புரி நன்மைகள் சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) முதலாம் கட்டத்தில் கொடுப்பனவுக்காக தெரிவு செய்யப்படாமை தொடர்பான மனக்குறைகளை, அதற்கான விண்ணப்பத்தினை தங்களது கிராம அலுவலர்;; அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்று டிசெம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் கிராம அலுவலர்;; அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது மனக்குறைகளை தெரிவித்துக்கொள்ள முடியும்.
5) இத்திட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்களை தமது பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் சபை அலகினை தொடர்பு கொள்வதன் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இன்றைய தினம்
இதன் போது அரசாங்க அதிபர் அவர்கள் கட்டளைத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் ஆகியோா் கலந்து கொண்டனர்.






