யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி - 06 பாராளுமன்ற ஆசனங்களுக்கான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் விபரங்கள்.
இன்று (15.11.2024) மு.ப 12.15 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு பெற்ற விருப்பு வாக்குகள் விபரங்களை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலானது சுமுகமாக நடைபெற்றதாகவும் அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தெரிவத்தாட்சி அலுவலர் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை கேட்கும் செயலமர்வு வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு. எல்.இளங்கோவன் தலைமையில் இன்றைய தினம் (05.11.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட ரீதியில் கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மீள்குடியேற்ற பிரதேத்தில் காணிகளை அடையாளம் கண்டு மின்சார இணைப்பை வழங்குவதில் சில பிரச்சனைகள் காணப்படுவதாக குறிப்பிட்டதுடன், ஏனைய மாவட்டங்கள் போல் காணி உரிமம் தொடர்பில் பிரச்சனைகள் இருந்தாலும் குடியிருப்பாளர்களுக்கான மின்சார இணைப்பை வழங்குவதில் ஒத்துழைப்புக்களை நல்கிவரும் இலங்கை மின்சார சபைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டறியும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இச் செயலமர்வு நடைபெற்றது
இச்செயலமர்வு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு. ஜசந்தறது விதான, பிரதிப்பணிப்பாளர் திரு. றொசான் வீரசூர்ய, வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.பிரணவநாதன், வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சி, மன்னாா் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட துறைசாா் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 4 6 7 8

கேரதீவு சங்குப்பிட்டிப் பாலப் புனரமைப்பு வேலைகளை இன்றைய தினம் (26.10.2024) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி, புனரமைப்பு வேலைகளின் முன்னேற்றத்தினை கேட்டறிந்து கொண்டார்.

 

1 2 3 4 5

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் (04.11.2024) மு. ப 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான
திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாராளுமன்றத் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவின் சர்வதேச கண்காணிப்பாளர் திரு. ஹெரி விபோவோ ரிக்சாக்சொனா (Mr.Hery Wibowo Trisaksono) மற்றும் திரு. எஸ். கலாராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2
கடந்த சனாதிபதித் தேர்தலில் போது செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டமை தொடர்பில் முதற்கட்டமாக, தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி - ஒவ்வொரு திணைக்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துதல் கலந்துரையாடல் நாளை (25.10.2024) பி. ப 3.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பங்குபற்றுபவர்கள் அவர்களுடைய திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.