பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (24.10.2024) மு. ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இவ் வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முன்கூட்டியே வினைத்திறனாக செயற்பட்டமையால் இவ் வேலைத்திட்டங்களில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படுவதாக அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதான உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உளவள பயிற்சி நெறி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.10.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பியவர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உளவளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உளவளம் சாா்ந்த செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நெறி நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.S .ஜீவசுதன் அவர்கள் இப் பயிற்சி நெறியின் வளவாளராக கலந்துகொண்டார்.
 
1 2 3 5 4
வாழ்க்கை வாழ்வதற்கான வலுவூட்டல் பயிற்சிவிப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறியின் (Life Coaching TOT) ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஒரு மனிதனுக்கு வளமான வாழ்க்கை இன்றியமையாதது எனவும், வாழ்க்கையினை மேம்படுத்துவதற்காகவும் மற்றவர்கள் வாழ்க்கையினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்கின்ற சமூகத்திற்காக பணியாற்றுவதற்காகவும், முன்வந்து இப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட பயிற்சியாளர் களைப் பாராட்டினார். மேலும் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான பயிற்சி நெறி என்றும், மாவட்டச் செயலக ரீதியாகவும் பிரதேச செயலக ரீதியாகவும் இப் பயிற்சி நெறியின் முக்கியத்துவத்தினை தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், வேலைப் பளுக்கள் நிறைந்த சமூகத்தில் சமூகப் பிரச்சனையினைத் தீர்க்க முனைப்புடன் வந்துள்ள பயிற்சியாளர்கள் குறித்து மகிழ்வடைவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வாழ்க்கையில் எவ்வாறு வாழ விரும்புகிறோமோ அவ்வாறு வாழ்வதற்கான வலுவூட்டலாக இப் பயிற்சி நெறி முன்னெடுக்கப்படவுள்ளது. இப்
பயிற்சி நெறியின் வளவாளராக இந்திய பயிற்றுவிப்பாளர் திரு. சீதாலக்ஸ்மி சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இப் பயிற்சி நெறியினை மாவட்டச் செயலகமும் மனிதவள பயிற்சி நிபுணத்துவ நிலையம் மற்றும் நிபுணத்துவ நிலையமும் (HRTC - மட்டக்களப்பு) இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளது.
இப் பயிற்சி நெறியில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர் களாக அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள்உள்ளடங்களாக, பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
1 2 3 4 5
 
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2024) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிப்பது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து விவசாயம் மற்றும் பழ வகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கும் ஏனைய இடங்களுக்கும் அனுப்பிவைத்தல் மற்றும் வெளி மாவட்ட உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்திற்கு எடுத்துவந்து சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அடுத்த கூட்டத்தில் இதனுடன் தொடர்புடைய வணிகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினர், நிபுணர்கள் மற்றும் உருளைக்கிழங்கு , வெங்காயம், வாழைக்குலை போன்ற விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளா், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர், வர்த்தக பிரதிநிதிகள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் மற்றும் மாவட்டச் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
  1 2 3 4 5
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (21.10.2024) பி.ப.04.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த சனாதிபதித் தேர்தல் கடமைகளில் குழுக்களின் செயற்பாடுகள் திறமையாகவும், சிறப்பாகவும் இருந்ததாகவும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்து, நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்களிலும் வினைத்திறனாக செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவித் தேர்தல் ஆணையாளர், பிரதம கணக்காளர், உள்ளடங்கலாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
 
1 2 3